பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

| 44 வெகுவாக நடைபெற்றது என்றும், சர்க்காருக்குக் aສາກົsurar வருவாய் வந்ததாதல் வேண்டும் என்றும் தெரிகிறது. ஒடத்தீர்வை இந்நாட்களில் இருத்தல் போல அந்நாட்களில் ஆறுகளைக் கடக்கப் பாலங்கள் இல்லை; வெள்ளம் போகும் பொழுது ஒடங்கள் மிகவும் வேண்டற் பாலனவாம். அரசாங்கத்துக்கும் ஒடங்கள் இருந்திருத்தல் வேண்டும். தனிப் பட்டவர்களும் ஒடம் உடையவராய் இருந்தனர். பாடல்பெற்ற தலங்கள் பலவும் காவிரியின் இருமங்கும் இருக்கின்றன. அத்தலங்கட்குச் செல்பவர்க்கும் ஆற்றைக் கடக்கப் பயன்படும் ஒடங்களுக்குத் தீர்வை வசூல் செய்யப் பெற்றது. =l கி. பி. 1776 : திருவையாற்றுத் துலா காவேரி ஸ்நானத்திற்குப் போவோர் வருவோர் 3 நாட்களுக்கு ஒடத்தீர்வை வாங்க ஆள் இல்லை. ஆகவே காவேரி ஓடக்காரர்கள் 8 குடமுருட்டி ஓடக்காரர்கள் 4 : கடங்கால் ஒடக்காரர்கள் 4; சந்தியா மண்டபம் ஒடக்காரர்கள் 6 ; ஆக மொத்தம் 22. இவர் கள் நாளொன்றுக்கு ஆளுக்கு 1 பணம் வீதம் தினப்படி 2 சக். 2 பணம் வீதம் 66 சக்கரம் கொடுத்தல் வேண்டும். மேற்கண்ட வருஷத்தில் விசேஷ ஜனங்கள் இல்லையாகையால் 33 சக்கரம் கொடுக்குமாறு விண்ணப்பம்" என்ற எழுத்துச் சான்றினால்" ஒரு ஒடத்துக்கு ஒரு நாளுக்கு ஒரு பன்ம் வீதம் ஒடத்தீர்வை வசூல்செய்யப்பெற்றது என அறியப்பெறும். கடைகட்கு வரி கடைகளுக்கு வரி விதிக்கப் பெற்றமை பற்றிய செய்திகள் தெரிய வருகின்றன. கடைகள் கட்டிக் கொடுத்தால் அவற்றுக்கு வாடகை உண்டு. 1762 : சிவகங்கைத் தோட்டம், ......... கடை - ராமசெட்டி குத்தகை 12 மாதம் - மாதத்திற்கு 14 வீதம் 18 சக்கரங்கள் ' என்ற குறிப்பால்" கடைகள் கட்டி வாடகைக்கு விடப்படுவதுண்டு என்று தெரிகிறது. இதுமட்டும் அன்றிக் கடைகட்கு வரி விதிப்பதும் உண்டு. எள் கரும்பு பயிரிடல் எள் பயிரிட்டால் ஸர்க்காருக்கு ஒரு பங்கும் பயிரிடுபவனுக்கு இரண்டு பங்கும் கொடுப்பது வழக்கம்." ஆனால் சரிபாதி வாரம் தருவதானால் எள் பயிரிடலாம் என்று புறக்குடி ராமசாமி மகாகே என்பவனுக்கு ராமையா 50. ச. ம. மோ. த. 29-81 51. ச. ம. மோ. த. 15.28 52. 12-126