பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/179

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

169 மேற்கூறிய பல சபைகளின் சட்ட ஆட்சி எல்லையைப் பற்றிச் சிந்தித் தால் பெரும்பாலான வழக்குகள் முதன் முதலில் முத்திரித சபையில் தான் அனுமதிக்கப்பெறும் என்னலாம், பின்னர்த் தருமசபையில் மேல் முறையீடு செய்யப்பெறும். அங்குத் தோற்றவர் கார்பார் பிரசங்கத்துக்கு முறையிடுவர்.' குற்றவியல் வழக்குகள் முதலில் நியாய சபையிலும், மேல்முறையீடு தரும சபையிலும் நிகழ்ந்தன என்று ஒர் ஆவணமும், தரும சபையில் மேல்முறையீடு செய்யாமல் நியாயாதிச சபையில் பிராது செய்யக்கூடாது என்றும் இத்தரும சபையின் திர்ப்பை எதிர்த்து நியாயாதீச சபையில் மேன்முறையீடு செய்யலாம் என்றும், அங்குக் செய்த தீர்ப்புக்கு மேன்முறையீடு கார்பார் பிரசங்கத்தில் செய்யப்பட்டது என்றும் பிறிதோர் ஆவணமும் கூறுகின்றன." இதனால் தரும சபை, நியாய சபை, நியாயாதீச சபை ஆகிய மூன்றும் குற்றவியல் வழக்குகளையும் விசாரித்தனர். ஆதல் கூடும். - - தரும சபை எனப்படும் பெரிய சபையில் பெரிய வழக்குகள் தீர்க்கப் பெறும்" என்பதால்" இந்நாளில் அசல் வழக்குகள் ( original suits) storio படுபவை தரும சபைக்குரியன என்னலாம். 1846, 1848க்குரிய சில ஆவணங்கள் "100 சக்கரங்களுக்கு மேலுள்ள வழக்குகளைத் தருமசபையில் தீர்ப்பது ' என்றமை இதன்ை வலியுறுத்தும்.' ' தரும சபைக்கும் முத்திரித சபைக்கும் சொல்லி 100 ரூபாய்க்குள் இருக்கும் விவகாரம் முத்திரித சபையில் தாக்கல் செய்து தீர்ப்பது 100 ரூபாய்க்கு மேற்படின் தரும சபையில் தாக்கல் செய்து தீர்ப்பது ' என்ற 1811ஆம் ஆண்டில் கொடுத்த ஆணையும் இதனை 事。曹王岳 வலியுறுத்தும். இறுதியான தீர்ப்பை எதிர்த்து அரசனிடத்திலும் முறையிடுதல் உண்டு ரெஸிடெண்டு துரையிடத்திலும் முறையிடுதல் உண்டு: இனி " திருட்டு கொலை முதலிய குற்றங்களை யார் விசாரிப்பது? ' என்று வினவிய கலெக்டருக்கு, " போலிஸ் ( கொத்தவால் ) விசாரணை செய்து அந்த விஷயத்தை ஸர்க்காரில் தெரிவித்து, ஸர்க்காரின் உத்தரவின்படி தண்டனை செய்வதுண்டு ' என்ற மறுமொழியால் கொலை திருட்டு முதலிய குற்றம் செய்பவரை விசாரிப்பவரும் தண்டனை வழங்குபவரும் யார் எவர் என்பவை அறியவரும்.' இந்த நீதி மன்றங்களில் பல்வகையான வழக்குகள் விசாரிக்கப் பெற்றன. அவ்வழக்குகள் பல தலைப்புக்களின்கீழ்" அமைக்கப்பட்டிருத்தல் கூடும் என்று தெரியவருகிறது. 11, 6–487, 488; 12. 7.782 முதல் 787 முடிய 13. 2-205, 206 14. 1-170 , 6.417 ; ச. ம. மோ. 81–81 15, 2–184 17. 6.14 முதல் 129 வரை 18, 2-207 19 10-22 முதல் 25 முடிய 22