பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

172 " முன்னால் விசாரணையின் ஆதாரம் நியாய சபையிலிருந்து கொண்டு வந்து பார்த்த பொழுது முன்னால் சபையில் வாதியினால் நியமிக்கப்பட்டவர் ஆஜராகி வாதியினுடைய பிர்யாதியில் தெரிவிக்கப்பட்ட ஆஸ்தி, முதலில் பிரதி வாதியினுடைய மனைவியின் ஸ்வாதீனம் செய்திருந்தது என்றும், இப்பொழுது அந்த ஆஸ்தி முதலில் பிரதிவாதியினுடைய ஸ்வாதீனத்தில் இருக்கிறது என்று கைப்பட எழுதிக் கொடுத்ததனால், அந்த விஷயத்தில் நிபந்தனைப்படி அர்த்த சம்பர் திக்க பதத்தில் பிர்யாதி செய்து கொள்வது என்று முன்னால் சொல்லப் பட்ட வாதியினுடைய நியமிக்கப்பட்டவர்க்குத் தெரிவித்து அனாதயம் செய்தது சரியென்று சபாவில் நிறைவேற்றப்பட்டது." -இதனால் அர்த்தசம்பர் திக பதம்’ என்பது பொதுவாக நிலையியற் பெர்ருள் (immovable) பற்றிய வழக்கு என அறியப்பெறும். " வாதி நாலங்க அலி ; பிரதிவாதி ரஸிப்பூ இவர்களுக்குப் பூமிவாத பதத்தில் சேர்ந்த விவகார விஷயம் பிரதிவாதி புனர்நியாயத்திற்காகக் கொடுத்த மனு முழுவதும் வந்ததை முன்னால் விசாரணையினுடைய ஆதாரம் பார்த்துச் சிந்தித்த இடத்தில் 10 சக்கரம் பொறுமானமுள்ள இடம் அதிலுள்ள மரம் செடி கொடிகள் கூட வரவேண்டும் என்று வாதியினால் செய்யப்பட்ட பிர்யாதி விசாரணை செய்து, மேற்படி இடம், முத்திரையுடைய காகிதத்தின் விலை ரூ. 4 வாதிக்குப் பிரதிவாதி தரவேண்டும் என்று முத்ரித சபையிலும் மேலும் தரும் சபையிலும் ஆன தீர்ப்புச் சரிதான் என்று சபா மஜ்கூரியிலும் நிர்ணயம் ஆன்து." -இதனான் பூமிவாத பதம்" என்பது நிலபுலங்களைப்பற்றிய வழக்கு என்பது தெரியவரும். இது பூவிவதபதம் என்றும் காணப்படுகிறது". மேற்கண்ட வண்ணம் பலவாறு வழக்குகளை வகைப்படுத்தி அமைத்த துடன், தாயபாகம், நானாவிதம் என்ற பிரிவுகளிலும் வழக்குகள் அமைந்தன் என்று தெரியவருகிறது: இதுகாறும் கூறியவற்ருல் பின்வரும் பல தலைப்புக்களில் வழக்குகள் வகைப்படுத்தப் பெற்றன என்பது போதரும்: 1. ரினாதான பதம் 7. பூர்வீக செர்த்துப் பங்கு பத்ம் 2. பிரகீர்ண்க பதம் 8. அர்த்தசம்பந்திக பதம் 3. ஸாஹஸ் பதம் 9. பூமிவாத பதம் 4. நீகூடி பதம் 10. தாயபாகம் 5. நிட்சேப பதம் 11. நானாவிதம் 6. ஸ்த்ேய பத்ம் 32. 9-77, 78 33. G-77, 7R, 116 34, 9–181 35. 9.125, 186, 198, 184 (புவிவாதபதம்-கிலங்களைப்பற்றியன்) 38, 10-22 முதல் 25 முடிய