பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/216

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 திருவலஞ்சுழி வெள்ளைப் பிள்ளையார் தேரிழுக்க 1769இல் 2450 GւյHնե* திருவையாறு பஞ்சநதீசுவரசுவாமி தேரிழுக்க 1794இல் 2360பேர்வ. 1797இல் 3160; இவ்வளவுபேரும் பல ஊர்களினின்று அனுப்பப்பெற்றனர் ; அருள்மிகு பிரகதீசுவரசுவாமி தேர்த்திருவிழாவுக்கு 1776இல் பல ஊர்களினின்று 20,200 பேரும் கி.பி. 1818இல் 27,394 பேரும் வருவிக்கப் பெற்றனர்". திருவாரூர்த் தியாகராசப்பெருமான் தேரிழுக்க 5,000 பேர்" திருவிடைமருதூர்த் தேரிழுக்க 6000 பேர்.

கோவில்கள் பழுது அடையின் பழுது பார்த்தும், கோயில் மூர்த்திக்குரிய அஷ்டபந்தனம் வலிமை குறையின் அஷ்டபந்தனம் செய்தும் கும்பாபிஷேகம் செய்வது மரபு. மராட்டிய மன்னர் பல கோயில்களுக்குக் கும்பாபிஷேகம் செய்வித்தமைக்குப் பல குறிப்புக்கள் உள்ளன. 1779க்குரிய குறிப்பு ஒன்று 'தஞ்சாவூர்க் கோட்டை தேவஸ்தானத்தைச் சேர்ந்த நான்கு சிவ விஷ்ணு ஆலயங்கள் 800 சக். செலவில் கும்பாபிஷேகம் செய்விக்கப்பெற்றன என்று தெரிவிக்கிறது. தஞ்சைப் பெரிய கோயிலில் 1803இல் பிள்ளையாருக்கும், 133 சிவலிங்கங்களுக்கும், சுப்பிரமணியருக்கும் சண்டேசுவரருக்கும் கும்பா பிஷேகம் நடைபெற்றதாகத் தெரிகிறது." வேறொரு குறிப்பால்". கி.பி. 1843இல் பிரகதீசுவரருக்குக் கும்பாபிஷேகம் நடைபெற்றதென அறியலாம். கி. பி. 1833இல் தெற்குவீதி காசிவிசுவநாத சுவாமிக்கு 100 சக். செலவில் கும்பாபிஷேகம் நடந்தது. அன்று 509 பிராமணர்களுக்கு உணவு அளிக்கப் பெற்றது." கருந்தட்டாங்குடியிலுள்ள ஆனந்தவல்லி தஞ்சாபுரேசுவரருக்கு கி. பி. 1821 இல் குடமுழக்கு விழா நடைபெற்றது." -" " + 'm --- ੋਂ கி. பி. 1801இல் திருவையாறு பஞ்சநதிசுவரசுவாமிக்கு மகாபிஷேகம் நட்த்தச் சக்கரங்கள் 10 செலவிட்டதாக ஒரு ஆவணம் கூறுகின்றமையின் 1801இல் பஞ்சநதீசுவரர் கோவில் கும்பாபிஷேகம் நடந்திருத்தல் 102.فاقاته

கும்பகோணம் ஆதிகும்பேசுவரர் கும்பாபிஷேகம் ஆகி 43 வருஷங்கள் ஆயின ; ஆகையால் கர்ப்பக்கிருகத்தின் மேல்மண்டபத் தளவரிசை வகையரா சிதலமாகி இருப்பதாலும், அம்மனுடைய கலசம் திருட்டுப் போயிருப்பதாலும், ஜீர்னோத்தாரணம் செய்யத் திருப்பணிக்கு 5000, கும்பாபிஷேகத்துக்கு ஞ், 5000 வேண்டி இருக்கிறது. நாகூர் வகையரா வியாபாரிகளிடம் இருந்து யாசகம் செய்தது ரூ. 2000 என்றும்,' - ੋਂ

150. 3, ... aur. s. 28-88 151. 1-145 152. ச. ம. மோ, த. 28-88 153 ச.ம. மொ. க 28-0 154. 4-111, 112. 155. 1-145 - 156. 1-146 இவ்விரு கோயில்களிலும் உள்ள தேர்களில் திருவாரூர்த்தோ சிக்கிசையாகி விட்டது: திருவிடைமருதூர்த் திேர் பழுதாகிவிட்டது . . ... To 157. 2-805, 806 158. 1-56; ச. ம. மோ. க.24-17 த9, 8,199 -160.1.292, 161. ச. ம.மொ.க. 6.9 - 162. ச. ம. மோ. க. 1-10 163. 4-255, 256