பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/234

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 பிற்காலத்தில் இவரின் வேறாகப் பாலசரஸ்வதி ஜகந்நாத பட்கோ சுவாமி என்பவர் ஒருவர் இருந்தார். இவர் பாலசரஸ்வதி என்ற இசைக் கருவியில் வல்லவர் என்றும், பாலசரஸ்வதி என்பது வடநாட்டு இசைக்கருவி என்றும், இதற்கு மாயூரி, தவுஷ் என்ற வேறு பெயர்களும் உண்டு என்னும் கச்சேரிகளில் இதற்குச் சிறப்பிடம் தந்தவர் ஜகந்நாத பட்கோசுவாமியே ஆவ என்றும், மகா வைத்தியநாதையர் போன்ற இசைப்பேரறிஞர் இவரது இசை புலமையைப் போற்றினர் என்றும் தெரியவருகிறது."க தஞ்சை மராட்டிய அரச பரம்பரையினரின் கி. பி. 1912க்குரிய 26ம் எண் அசல் வழக்கில் பிரதிவாதிகட்குரிய 23ஆவது சாட்சியாக ஜகந்நாத பட்கோ சுவாமி என்று ஒருவர் விசாரிக்கப் பெற்றார். இவர் ஏறத்தாழ கி.பி. 1855இல் பிறந்திருத்தல்கூடும். 1916இல் இவர் அறுபது வயதுடையவர். இவர்தம் வாக்கு மூலத்தில் இவர் தந்தையின் பெயர் வேதமூர்த்தி ராஜபூரீ பாளம்பட்ட பட்கோசுவாமி என்றும், பாலசரஸ்வதி என்ற இசைக்கருவியில் 25 ஆண்டு களாகத் தாம் ஒருவரே வல்லமை படைத்துத் திகழ்வதாகவும் கூறியுள்ளார்.

  • I introduced the instrument Balasaraswathi in these parts 25 years ago. I have not seen any other playing it. Those who liked it invited me alone ****

மகாவைத்தியநாதையர் காலம் 1844-1893 என்று கூறப்பெறுகிறது." இதனால் ஜகந்நாத பட்கோசுவாமி மகாவைத்தியநாதையரின் சமகாலத்தவர் ஆதல் காணப்பெறும். பால சரஸ்வதி பட்கோ சுவாமியின் தந்தை பாளம்பட்டு பட்கோ சுவாமி என்பவரைப்பற்றி 1813, 1814, 1826 ஆகிய ஆண்டுகட்குரிய ஆவணக் குறிப்புக்களினின்று அறியப்பெறும். இவர் " வலர்காரின் வாத்தியார் " என்று 1814இல் குறிக்கப்பெறுவதால் இவர் அரசகுரு ஆதலோடு இசை கற்பித்தவர் என்றும் ஊகிக்கலாம். இவருக்கு 5 கிராமங்கள் சர்வமானியமாக அளிக்கப் பெற்றன. இவரிடத்தில் இரண்டாம் சரபோஜிக்குப் பெருமதிப்புண்டு போலும். ஆகவே இவர் வீட்டுக்கு விருந்துக்குச் சென்றார் என்றும், சென்றபொழுது ஆலத்தி எடுத்து வரவேற்கப்பெற்றார் என்றும் தெரியவருகிறது." இவர் கி. பி. 1813க்குரிய ஆவணத்திலும் குறிக்கப்பெறுகிறார். அவ்வாவணக்குறிப்புப்" பின்வருவதாகும்: 784. P. 253, Tanjore as a seat of Music, Dr. Seetha 783). D. W. 33 - In the Subordinate Judge's Court, Tanjore; the 3rd day of October 1916; O. S. No. 26 of 1912; Deposition of Jagannatha Bhat Goswami – P. 271, line 10 and P. 274, lines 37-38. 784, Page 67, Glimpses of Indian Music by Gowri Kuppuswami and Dr. K. Hariharan (1982) 79. 1-28 ச. ம. மோ, த. 18.11 பார்க்க 80. 1-171 31, 1-840