பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/235

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

225

  • 1813 : திருப்பயணத்தில்' ஆபத்சகாயேசுவரசுவாமி மாதத்திற்கு ஒரு கோதானம் கொடுப்பது பழக்கம். அது தற்பொழுது சேரவில்லை. அச்சுவேலை பிராமணர்களும் ரா. ரா. பாளம்பட்டு பட்கோ சுவாமியும் ரா. ரா. பெரிய மாப்பிள்ளை மூலம் பிராமணர்களுக்குக் கொடுத்தால் ஒரு கோதானத்தை பூரீசுவாமிக்குக் கொடுக்க உத்தரவாகவேண்டும்.” --

திருத்தல யாத்திரை லாவணி இரண்டாம் சரபோஜி காசியாத்திரை செய்தமை பற்றிய வருணனை நூல் ஒன்று உண்டு. அது தஞ்சை சரஸ்வதி மகால் நூல் நிலைய வெளியீடாகத் திரு. கிருஷ்ணசாகி மாடிக் ராஜேசாகேப் அவர்களால் பரிசோதித்து வெளியிடப் பெற்றுள்ளது. இந்நூல் : திரிஸ் தல யாத்ரேச லாவண்ய ” என்ற பெயர் உடையது. இது மராட்டியமொழியில் உள்ளது. இதனை இரண்டாம் சரபோஜி மன்னரே எழுதினார் என்று இதனைப் பதிப்பித்த திரு. கிருஷ்ணசாமி மாடிக் அவர்கள் எழுதியுள்ளார். ஆனால் இதனை இயற்றியவர் துண்டி சுத சிவ என்னும் புலவர் ஆவர் என்று சரஸ்வதி மகால் நூல் நிலைய மராத்தி மொழிப் புலவர் கூறுகிறார்:. ஆனால் உட்கே கோவிந்தாசாரியார் என்ற கவிஞர் காசிப் பயண வர்ணனை செய்து லாவணி இயற்றினார் என்று சில ஆவணக் குறிப்புக்களால் தெரியவருகிறது. இக்கவிஞர் சரபோஜி காலத்தில் இருந்தவர். கி.பி.1821க்குரிய ஆவணக்குறிப்பொன்று இவருக்கு மாதம் ஒன்றுக்கு 2 சக்கரம் 1. பணம் கொடுத்ததாகக் கூறுகிறது. இது இவருடைய மாத ஆதியம் ஆகலாம்." 1829க்குரியதும், ஸர்க்கேல் ராஜேபூரீ சர்ஜேராவ் காட்கே அவர்களுக்கு எழுதிய தும் ஆகிய கடிதத்தில், காசிப்பயணம் குறித்து வர்ணனை செய்து உட்கே கோவிந்தாசாரியார் செய்த லாவணியின் நகல் (நான்கடிகள் கொண்டது 35க்கு ) லாவணி 59க்கு எழுதிய லிஸ்டும் ........................ லாவணியின் காவியம் 35ம் ஹ-ஜாரிடம் சேர்ப்பித்தேன் 睡 轟 ■ ■■■ ■■■ 85ני என்றும், 21-3-1831க்குரியதும், சாலுவநாயக்கன் பட்டணத்தில் அரசர் தங்கி இருந்தபொழுது எழுதப்பெற்றதும் ஆண்கடிதத்தில், . . . உட்கே கோவிந்தாசாரியார் என்ற கவி காசிப் பிராயாண வர்ணனை செய்து சில லாவணிகளை ஹ-ஜுருக்குக் கொடுத்திருக்கிறார்கள்............" என்றும் காணப்படுவதால் காசியாத்திரை வருணனையுள்ளதும், ' த்ரிஸ்தளி -ாத்ரேச லாவண்ய ' என்ற பெயருடையதும் ஆன லாவணி உட்கே கோவிந்தாசாரி என்பவரால் எழுதப்பெற்றதாதல் வேண்டும் என்பது தெரிய உாகும். ஆ *= 31. 1-840 82. திருப்பயணம்-திருப்பழனம்; திருவையாற்றுக்கருகில் கும்பகோணம் போகும் பாதையிலுள்ள சிவத்தலம். 83. சரஸ்வதிமகால் இதழ் எண் 80 - 1, 2, 3-1979. பக். 7 - சரபோஜி மன்னரும் மராத்தி இலக்கியமும், 84 ச. ம, மோ, த. 18.10 85. ச. ம.மோ. த. 16:16, 17 86. ச. ம. மோ. த. 16.27 29