பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

241 " சமையல்காரர் 10 (இரண்டு பேர் தண்ணிர் நிறப்புகிறவர்; 2 பேர் பரிசாரகர் ); 1 கணக்குப் பிள்ளை ; 1 அம்பட்டன் ; 1 வண்ணான்' * என்று சமையல்காரர்களும் தொழிலாளிகளும் குறிக்கப்பெற்றனர். இக்கல்வி நிலையத்தில் வேதம் சமஸ்கிருதம் ஆகியவற்றைப் பார்ப்பனர் களே கற்றனர் என்பதில் ஐயமில்லை. தருக்கம், சோதிடம், மகாராட்டிரம், தெலுங்கு, தமிழ், ஆங்கிலம், உடற்பயிற்சி ஆகியவற்றைச் சத்திரியர் பயின்றனர். இங்ங்னம் ஓராவணம் குறிப்பிடுகின்றது. இதனுள் ஜம்பு சாஸ்திரி-தர்க்கம் சொல்லித் தருபவர் - மாணவர் கூடித்திரியர் 1 - யஜ்ஞேஸ்வர சாஸ்திரி - தர்க்கம் - மாணவர் அந்தணர் - 4” என்றிருப்பதால் பார்ப்பனர்கட்குத் தனியாகவும், கூத்திரியர்கட்குத் தனியாகவும் பாடம் சொன்னார்கள் போலும் என்று நினைக்க இடம்தருகிறது. - கவாத்து"அ குதிரை ஏற்றம் ஆகிய உடற்பயிற்சிகளுக்குச் சிறப்பிடம் தந்தனர் என்பது அறியத்தக்கது. H பெண்களும் ஆசிரியராக இருந்தனர். 'நவ வித்யாகலாநிதி பள்ளிக் கூடத்தில் சித்திரக்காரி செங்கம்மாளுக்கு மாசத்துக்கு 4 சக்கரம் சம்பளம்" என்பது இதனை வலியுறுத்தும்.” i படிக்கும் மாணவர்களைத் தரம் பிரித்துப் பாடம் கற்பித்தனர் என்பதும் தெரியவருகிறது. "நவவித்யா கலாநிதி பள்ளிக்கூடத்தில் மகாராஷ்டிரம் எழுதும் பையன் கள், வஜிராதாவின் பையன்கள் 23, அரண்மனைப் பையன்கள் 27, பிராமணப் பையன்கள் 20, மராத்திப் பையன்கள் 46, சூத்திரப் பையன்கள் 7, சிப்பாய் பையன்கள் 6 ஆக 129." 1 முதல் நெம்பர் பையன்கள் 16 பேர்களுக்கு எழுத்துக்களெல்லாம் பாளோபந்த் அ மோடி எழுத்துப் படிக்கத் தெரியும்; கணக்கு ஐந்து விதமானதும் அமரம் 2ஆம் காண்டம் 6 வர்க்கமும், பாலபோதினி பிரதம பிரகரணமும் முக்கால் ஆகிவிட்டது." இரண்டாம் நெம்பர் பையன்கள் 13; எழுதப்படிக்கத் தெரியும்; பால போதினி பாகம்; அமரம் சற்றுத் தெரியும்; 5 பேருக்கு அமரம் தெரியாது." il மூன்றாம் நெம்பர் பையன்கள் 30: எழுதப்படிக்கத் தெரியும்; அமரம் சற்றுத் தெரியும்; பாலபோதினி பிரதம பிரகரணம் தொடங்கியிருக்கிறது." H. H. H. ■ ■ ■ ■ ■ ■ ■■■ ■■■ H. H. H. H. H. H. H. H. H. H. H. H. He is - * - 6. ச. ம. மோ. த. 25-19; 8-15; 20.7 6.அ. போர்வீரர் புரியும் உடற்பயிற்சி 7, 2-39 7.அ. மகாராட்டிரம் 31