பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 அலமாரிகள் 6: வடக்குப் பக்கச் சுவரையடுத்து 6 அலமாரிகள்; கிழக்குப பக்கச் சுவரையடுத்துத் தெற்குப்பகுதியில் அலமாரி 1: வடக்குப் பகுதியில் அலமாரி 1; மொத்தம் 14 புதிய அலமாரிகள் செய்து சேர்க்கப்பெற்றன." - பழுதடைந்த அச்சு நூல்களைப் பழுதுபார்த்து மீண்டும் கட்டுதல் (பைண்டு செய்தல்) அந்நாளிலும் உண்டு. இதனை " 1828; தாவீத் பிள்ளை மூலம் ஆங்கிலப் புத்தகங்களைப் பழுதுபார்க்க ருஸ்தும்ஜியின் கடையில் காகிதம் 2 தஸ்தா ரூ. 2" என்ற குறிப்பால் அறியலாம்." --- சரபோஜி ஒரு அச்சகம் நிறுவி இருந்தார். பல மொழிகளிலும் நூல்கள் அச்சிட வசதியிருந்தது. சுப்பிரமணிய சாஸ்திரி என்பவர் " குமார சம்பவம் சம்பு அ என்ற நூல் எழுதினார். அதனை ஹாஜுர் மகாலில் அச்சிட வேண்டுகோள் விடுத்துள்ளார். இது 1813க்குரிய ஆவணக்குறிப்பு." இது அச்சிடப்பெற்றிருத்தல் வேண்டும் என்பதை பர்னலுக்களித்த அச்சு நூல்களில் இஃதொன்றாக இருப்பதால் அறியலாம்."அ * கி. பி. 1807க்குரிய குறிப்பொன்று, - - " அச்செழுத்துக்களின் கணக்கு ; இங்கிலாந்திலிருந்து சரபோஜி தன் அச்சகத்துக்காக அச்செழுத்துக்களை வாங்கினர் 11:5ஆ என்பதால் 1807 லேயே அச்சகம் தொடங்கப்பட்டிருத்தல் வேண்டும் என்பதும் அறியப்பெறும். மராட்டிய மொழியிலும் அச்சிட்டார்கள் என்று பிஷப் ஹீபர் எழுதிய 30-3-1825க்குரிய குறிப்பால் அறியப்பெறும்." 1827 ஆங்கிலேய புத்தகங்களைத் தயார் செய்யக் கும்பினி ரூ. 30 ' என்ற குறிப்பால்' ஆங்கிலத்திலேயும் நூல்கள் அச்சிடப்பட்டன என்பது போதரும். சரஸ்வதி மகாலை வளர்த்தற்குரிய சிறந்த வழி பல புதிய ஏட்டுச் சுவடிகளைப் படியெடுத்தலும், பழுதடைந்த சுவடிகளைப் புதுப்பித்தலுமே என்பதை அறிந்த அரசர் பல மொழிகளிலுள்ள சுவடிகளை இடையீடின்றிப் பல மொழிகளில் வல்லவரை நியமித்துப்படியெடுக்கச் செய்தார். படியெடுத் தவர்கள் பலராதல் கூடும் என்பதை 1827இல் விலைக்கு வாங்கப்பெற்ற எழுத் தாணிகள் எண்ணிக்கையைப் பார்த்தும் அறியலாம் : ராஜஸாம்பாபுரம் அன்ன சத்திரத்திலிருந்து ஸரஸ்வதி மகாலுக்கு 501 எழுத்தானிகட்குச் சக்கரம் 43-8;" என்பது அக்குறிப்பு'. == 133. ச. ம. மோ.த. 28-88 134, -4-445134.அ. சம்பு - செய்யுளும் வசனமும் விரவிவரும் பிரபந்த வகை 135. 1-178 135.அ. அடிக்குறிப்பு 107க்குரியது காண்க 135.ஆ. 8-267 136. The rarest curiosity of an Indian Court is an English Printing Press working by native Christians in which they struck off a sentence in * Maratha in the Bishop's presence in honour of his visit. 137, 4–212. - -138. 4-198