பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 முழு நூல்களைப் படியெடுப்பது மட்டுமன்றிப் பழுதாய்ப்போன ஓலைகள் மட்டும் அகற்றப்பட்டுப் படியெடுத்து அவ்வவ்விடங்களில் வைக்கப்பெறும் என்றும் தெரியவருகிறது. இதனை, - "டிை மகாலில் இருக்கிற சமஸ்கிருத இராமாயண புத்தகங்களில் பழுதாய்ப்போன பத்திரங்களைப் புதிதாய் எழுதின கிரந்த சங்கை : நெ. 1002இல் பத்திரம் 1க்குக் கிரந்த சங்கை 50 நெ. 1007இல் பத்திரம் 10க்குக் HH 375 நெ. 949இல் fj 10க்குக் If 375 1. ஆக 800 டிை கிரந்த சங்கை 800க்கு 1000க்கு ரூ.2-8-0; கூடுதல் ரூ. 2ம் டிை புத்தகங்கள் எழுதின ஏகநாதய்யருக்குக் கொடுக்கும்படி உத்தரவாக வேணும். 26-2-77 குப்பா பட்லு (தெலுங்கில்) " --- என்ற தமிழ் ஆவணத்தான்" அறியலாம். புதியனவாகப் புனையப்பட்ட நூல்களையும் விலைக்கு வாங்குவதுண்டு என்று தெரிகிறது. தமிழில் மருத்துவநூல் ஒன்று திருவெண்காட்டுப் புலவர் ஒருவர் பாடலாக எழுதினார். அந்நூல் 145 பாடல்களையுடையது. அது 4 சக்கரம் 3 பணம் கொடுத்து விலைக்கு வாங்கப்பெற்றது. ஒலைப்புத்தகம் எழுதுபவர்கள் - மாதச்சம்பளத்தில் நியமிக்கப்பட்டவர் களின் பெயர்கள் தெரியவருகின்றன : __ சதாசிவபட் சுப்பாபட் - கர்நாடக மொழி சிதம்பர சாஸ்திரி - தெலுங்கு மன்னார்குடி சீதாராமய்யர் - கிரந்தம்" வேலாயுதம் பிள்ளை அழகம் பிள்ளை வேலாயுத முதலி சுந்தரராஜ முதலி சுப்பராய பிள்ளை வெங்கடாசலம் பிள்ளை சாமிநாத பிள்ளை வாசுதேவ பிள்ளை - இந்நால்வரும் தமிழ் எழுதுபவர்கள் போலும்." = அவ்வப்பொழுது சுவடிகளைச் சூடேற்ற வேண்டுவது மிகவும் இன்றி யமையாததாகலின் 17-2-1875லும் 24-2-1877லும் சரஸ்வதி மகாலில் இருந்த குப்பா பட்லு என்பவர் வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அவர் வேண்டுகோளுக்கேற்பப் புத்தகங்களைக் காயப்போடுவதற்கு மாதம் ஒன்றுக்கு ரு. 3; சம்பளத்தில் ஒரு ஆள் நியமிக்கப்பெற்றார்." 160, 8-89 (8) பக்கம் 84, 86 காண்க. 161. 5-11 162. 4-85; ச. ம. மோ. த.18-8 163. 8-81 (8) 164. 8-88 (22) 165. 8-81 (4) - = -- 33