பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

265 இரண்டாம் ஏகோஜிக்குப் பிறகு இரண்டாண்டுகள் கழித்துப் பட்டம் எய்தியவர் பிரதாபசிங்கர். இவர் இரண்டாம் ஏகோஜியின் தம்பியாவர்; இவர் 1739 முதல் 1763 வரை ஆட்சிபுரிந்தவர். இவர் 1739இல் சந்திரகிரகண காலத்தில் திருவிசநல்லூர் மேலக் காவேரியில் நன்செய் 2 வேலி புன்செய் , வேலி அனந்த நாராயண சாத்திரி என்பவருக்கும்." 1748இல் பந்தண்ை நல்லூரில் 1, வேலி 3 மா இராமானுசாச்சாரி என்பவருக்கும் நிலம் தானம் செய்தார். மேலும் 1747இல் சந்திரகிரகண காலத்தில் அனந்தய்யங்கார் மகன் சக்ரோத அய்யங்காருக்குத் திருணகிரி மாகாணத்தில் 14 அடிக்கோலால் ஒருவேலி நன்செய் நிலம் சர்வமான்யமாக அளித்தார்." மேற்கண்ட நாளிலேயே, " ஆதி தர்க்கம், வேதாந்த விசார ஆசரணம் செய்யும் ஆச்வலாயன சூத்திரம் ’சு சாண்டில்ய கோத்திரம்’க தோண்டோ பண்டிதர் பெளத்திரர் கங்காதர பண்டிதர் புத்திரர் நாராயண பண்டிதருக்குத் தாராதத்தம் இ இனாம் ஒருவேலி நன்செய் நிலம் திருணகிரி மாகாணத்தில் " கொடுக்கப்பெற்றது." பிரதாயசிங்கர் முகமதியர்கட்கு அளித்த நிலக்கொடையும் உண்டு. பண்டாரவாடை தேவராயபேட்டையில் முகம்மதுகான் என்ற ஒருவர் சுங்க அதிகாரியாக இருந்தார். அவருக்கு 1340 குழி 1756இல் கொடுக்கப்பெற்றது." பிரதாபசிங்கர் மகன் துளஜா காலத்திலும் பல நிலக்கொடைகள் உண்டு. இவர் 1765 முதல் 1787 வரை ஆட்சி செய்தவர். இவர் 1767இல் யமுனாம்பா புரம் பிராமணர்கட்கு 60 வேலி நன்செய் புன்செய் சர்வமானியம் அளித்தார்." கி. பி. 1776இல் இசைப்புலமை கருதி ஜகன்னாத பட்கோஸ்வாமிக்குச் சருவமானியம் அளித்தார்." சிம்மராஜ பண்டிதர் என்ற ஒருவரும் இதே ஆண்டில் இவருடைய நிலக் கொடையைப் பெற்றுள்ளார். இதே ஆண்டில் உமாம்பாபுரம் கெளரிபதி சாஸ்திரி, கிருஷ்ணாசாரி மல்லார்ஜி, பூரீநிவாஸாசாரி, கனம் ஷாமா பண்டிதர், வைத்தியலிங்க சாஸ்திரி, வீணை வெங்கடராமய்யா முதலிய பலருக்குச் 25, 1–198 26. 3-144, 145 i 27. திருணகிரி - திருநகரி ; கோயில் பணிகளும் சமயப் பொறையும் (கட்டுரை 15) அடிக் குறிப்பு 189க்குரியது காண்க 28. ச. ம. மோ. த. 8-48 - 28.அ ஆச்வலாயன சூத்திரம் - ஒவ்வொரு குடியிலுள்ளாரும் நடக்கவேண்டிய விதிகளை கூறுவன கிருஹ்ய சூத்திரம் எனப்படும். ஆஸ்வாலயனர் கூறியவை ஆசுவலாயன சூத்திரம் 28 ஆ. குடியே உம்பல் கோத்திரம் ஆகும்" - பிங்கலங்தை 2207 ஆம் நூற்பா 28இ. தாராதத்தம் - நீர்வார்த்துக் கொடுத்தல். 29. ச. ம. மோ. த. 8-42 30, 1-188 31. 3-136 32. ச. ம. மோ, த, *8 இவரைப் பற்றியவற்றை இசை நாடகம் என்ற தலைப்பில் 78.அ என்ற அடிக்குறிப்புக்கு உரியவற்றுள் காண்க. 33. ச. ம. மோ, த. 29-8 34