பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

270 1. இராச குமாராபாயி சத்திரம் இது மிகப் பழமையான சத்திரம் ஆதல் கூடும். கி. பி. 1728க்குரிய குறிப்பொன்று இச்சத்திரமும் கோயிலும் அமைத்த செய்தியைத் தெரிவிக் கிறது." ராஜகுமாராபாயி என்பவர், துக்கோஜி எனப்பெற்ற முதலாம் துளஜாவின் மனைவியாவர்." துக்கோஜி 1728 முதல் 1736 வரை ஆட்சி செய்தவர். இச்சத்திரம் சூரக்கோட்டையில் உள்ளதாதல் வேண்டும். 2. சக்வாரம்பாபுரச் சத்திரம் கி. பி. 1756க்குரிய குறிப்பொன்று பிரதாப சிங்கர் காலத்தில் சக்வார்பாயி சாகேப் அவர்களுக்குரிய திருபுவனச் சத்திரத்துக்கும் அக்கிரகாரத்துக்கும் மொயின் கொடுத்தமை கூறுகிறது." மேலும் ஓர் ஆவணம் அச்சத்தி ரத்துக்கு மொயின் 3300 சக்கரம்; 100 பிராமணர்கட்கு உணவு அளிக்க 2600 சக்கரம்; தண்ணிர்ப்பந்தல் நாள்கிழமைகட்காக 5028 சக்கரம் வருமானம் தரும்படியாகத் தேப்பெருமாநல்லூர் சர்வமானியமாக அளிக்கப்பெற்றது என்று தெரிவிக்கிறது. சக்வாரம்பா பாயி என்பவர் பிரதாப சிங்கரது மனைவியாவர். இச்சத்திரம் தொடங்கியபொழுது 24 வீடுகள் கட்டப்பெற்றன; சேரமாநல்லூர் என்ற ஊரின் வருவாயினின்று வீடொன்றுக்கு 200 கலம் வீதம் கொடுக்கப் பெற்றது. இச்செய்திகளை 1837க்குரிய ஒராவணம் கூறுகிறது." 3. இராசகுமாராம்பாள்புரம் சத்திரம் இராசகுமாராம்பா என்பவர் இரண்டாம் துளஜாவின் மனைவியாவர்.' கி. பி. 1777இல் சத்திரம் கட்டி அக்கிரகாரம் கட்டினார். இச்சத்திரம் மீமிசல் (மீனமேசல்) என்னும் ஊரில் இருப்பதாகும்." இச்சத்திரத்துக்கு அருகில் 1778இல் கல்யாணராமசாமி கோயில் எடுப்பிக்கப்பெற்றது. இதன் பூசை முதலியவற்றுக்காக 2100 சக்கரம் மொயின் செய்து நிலதானம் செய்யப் பெற்றது." இராசகுமாராம்பா பாயிடம் அலத்துார், வலிவயல், தாளனுார், மீன மேஸல் என்ற ஊர்களுடன் ஆவுடையார்குடி சோத்திரியம் சேர்த்து அளிக்கப் பெற்றது.' 67. 4-41 68. பக்கம் 81 : போன் ஸ்லே வமிச சரித்திரம், சமிழ்ப் பகுதி' 69. ச. ம. மோ. த. 25-28 தஞ்சாவூர் மானுவல் ' என்ற நூாவில் பக்கம் 287இல் சக்வாரம்பாபுரம் சத்திரம் அம்மாசத்திரம் என்றவூரில் உள்ளது என்றும், சக்வாரம்ப என்பவர் துளஜாவின் மனேவி என்றும், இச்சத்திரம் கி. பி. 1776இல் தொடங்க. பெற்றது என்றும் உள்ளது 70. 1-116, 117 71. பக்கம் 81, போன் ஸ்லே வமிச சரித்திரம், தமிழ்ப் பகுதி 72, 5–290 73. பக்கம் 109, போன்ஸ்லே வமிச சரித்திரம், தமிழ்ப் பகுதி தஞ்சாவூர் மானுவல் என்று நூல் பக்கம் 287இல் இராசகுமாராம்பாள் துளஜாவின் தாய் என்றுள்ளது 74. 1-159 75. 1-194; (மீனமேஸலுக்குப் பிரதி பெயர் ராஜகுமாரம்பாபுரம்) 76. 1-195 77, 5–801, 302 - = ==