பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 வாசுதேவ என்பவருக்கு ' ஷஷ்டி பூர்த்தி ' சத்திர தருமத்திலேயே செய்யப் பெற்றது போலும்." உத்தரக்கிரியையும்'அ' சத்திர தருமத்திலேயே நடத்தப் பெறுவதுண்டு” ( அடிக்குறிப்பு 86அ காண்க. ) - 7. இராமேசுவரம் சத்திரம் இது கி. பி. 1784இல் இரண்டாம் துளஜாவால் அமைக்கப்பெற்றதாதல் வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்கு விடப்பட்ட ஊர் வடசேரி என்றும், 12 பேர்கள் மூன்று ஆண்டுகளுக்கு 2160 சக்கரம் வீதம் கொடுப்பதாகக் குத்தகை எடுத்தார்கள் என்றும், இழப்பு ஏற்படின் அரசுக்குத் தொந்தரவு தருவ தில்லை என்றும், ஊர்க்கோவில்பூசை தண்ணிர்ப்பந்தல் முதலியன அன்னோரே நடத்துவதாகவும் கூறும் ஓராவணக்குறிப்பு உள்ளது." இது கி. பி. 1829க்கு உரியது. இந்த அன்னசத்திரத்துக்கு இடும்பாவனம் மாகாணத்தினின்று நெல் அனுப்பப்படுவதுண்டு." இராமேசுவரத்தீவில் இரண்டு சத்திரங்கள் இருந்தன ஆகலின் இது பழைய சத்திரம் எனப்பட்டது. 8. சுலசஷணாம்பாபுரம் சத்திரம் (வேளங்குளம்) இச்சத்திர மராமத்துக்கு 1784இல் முத்துப்பேட்டையிலிருந்து 3665 சக்கரம் செலவு செய்யப்பெற்றுள்ளதாகத் தெரிவதால் இச்சத்திரம் கி. பி. 1784 இல் அமைக்கப்பெற்றதாதல் கூடும்." சுலக்ஷணாபாயி சாகேப் இரண்டாம் துளஜாஜியின் மூன்றாவது மனைவியாவர்." கி. பி. 1784இல் அக்கிரகாரம் எல்லையைச் சேர்ந்த கட்டுக்கோப்பும் குளமும் 500 சக்கரத்துக்கு விலைக்கு வாங்கப்பெற்றது." இந்த ஊர் அக்கிரகாரத்தில் 25 வீடுகள் கட்டித் தானம் செய்யப்பட்டன." இச்சத்திரத்துக்கு உரிய கோயில் அகஷயபுரீசுவரர்கோயில் எனப்பெற்றது. கி. பி. 1830இல் சத்திரத்துக்கும் கோயிலுக்கும் செந்தலை உப்பளத்திலிருந்து விற்று முதலான உப்புக்குக் 'காணி 1க்குக் கோவிலுக்கு ; பணம், சத்திரத்துக்கு இபணம்' வீதம் அளிக்கப்பெற்றன." கி. பி. 1841இல் இச்சத்திரத்தைச்சார்ந்த அகூடியபுரீசுவரர் கோயிலுக்குக் கும்பாபிஷேகம் நடை பெற்றது." கி. பி. 1824இல் இச்சத்திரம் செள. அஹல்யாபாயி சாகேப் அவர்கள் 87. ஷஷ்டிபூர்த்தி - 60 ஆம் ஆண்டு கிறைவு விழா. 88. ச. ம. மோ. த. 8.41 88.அ. உத்தரக்கிரியை - இறக்தவர்க்குச் செய்யப்பெறும் இறுதிச் சடங்குகள் 89. ச. ம. மோ, த. 8-88, = 90. ச. ம. மோ, த. 4-18 91. ச. ம. மோ. த. 4-28 92. 1-180 93. பக். 125; போன்ஸ்லே வம்ச சரித்திரம், தமிழாக்கம் 94. 1–127, 128 95. ச. ம. மோ. த. 8-28 96, 5-3 97. ச. ம. மோ. த 4-7