பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 சத்திரத்தின் மேல் ஏறிவந்து திருடினார்கள்; இங்ங்ணம் சில நாட்கள் நடைபெற்றன; ஒருநாள் அவர்கள் பிடிபட்டார்கள் - என்று ஓர் ஆவணம் கூறுகிறது." * இச்சத்திரத்துக் கல்வி நிலையத்தில் பாடம் சொல்வதற்கு அங்கு இல்லாத நூல்களைத் "தஞ்சை சரஸ்வதி பாண்டாரத்தில் " இருந்து எடுத்துச் சென்று திருப்புவதும் வழக்கமாயிருந்தது." 12. மல்லியம் சத்திரம் கி. பி. 1821க்குரிய குறிப்பு" மல்லியம் சத்திரம் அஹல்யாபாயி சாஹேபு மேற்பார்வைக்குரியது என்றும், நான்கு வேலி சர்வமான்ய நிலத்தை வாங்கு வதற்கு ரூ. 2,000 சக்கரம் அரசு, பொருள் நிலையத்திலிருந்து பெறப்பட்ட தென்றும், ஓராண்டுக்குப் பின் பயிர் வருமானத்தில் திருப்பி வாங்கிக்கொள்ள வேண்டும் என்றும் கூறுகிறது. இதனால் சத்திர தருமங்கட்கு நிலங்கள் அதிகமாக வாங்கப் பெறுவதுண்டு என்றும், தொகை சத்திரத்தில் இல்லை யெனில் சர்க்கார் பொருள் நிலையத்திலிருந்து கடன் பெற்று வாங்கிச் சத்திர வருமானத்திலிருந்து ஓராண்டு கழித்துக் கடன் அடைப்பதுண்டு என்றும் பெறப்படும். 1850இல் மல்லியம் அன்னசத்திரம் பழுதுபார்க்கப்பட்டது." இதனால் இச்சத்திரம் மிகப் பழமையதாதல் கூடும். 13. தஞ்சாவூர்க் கோட்டை அன்னசத்திரம் இந்தச் சத்திரத்துக்கு மேற்பார்வையாளராக இருந்தவர் சேனா துரந்தரர் ராஜேபூரீ ராமையா வராஹப்பையா என்பவர் ஆவர்.' ஒரு தடவை சத்திரத்தில் உணவு அளித்த பிறகு அவர் சத்திரத்தைப் போய்ப் பார்த்தார். சமைப்பதற்கு வந்த அரிசியில் தவிடும் கல்லும் நொய்யும் இருந்தமையால் 10 படி அரிசியைச் செப்பனிடச் செய்தார். ஒருபடிக்குத் தவிடு படி, நொய் படி, ஒரு கையளவு கல் இருந்தமை அறிந்து உடனே சத்திரம் வேலை பார்க்கும் 7 பேருக்கும் சேர்ந்து இரண்டு ரூபா, இரண்டு வீசம் அபராதம் விதித்தார்.' தஞ்சாவூர்க் கோட்டை சத்திரத்துக்குரிய நிலம் அன்னப்பேட்டை சர்வமானிய கிராமம் என்று தெரியவருகிறது." இந்தச் சத்திரத்தில், தண்ணீர்ப்பந்தல் தருமம்' சத்திரத்தைச் சேர்ந்த பட்டாபி ராமசாமி கோயிலில் ராமநவமி திருவிழா' கோகுலாஷ்டமி திருவிழா, தீபாவளி" பிருந்தாவன பூசை," ராதாகிருஷ்ண திருவிழா" 107. 1-261,262 108, 1–270. 109. 1-242 110. ச. ம. மோ. த. 2.8 111, 12.96 112, 12-96, 97 113. 12-101, 109, 110, 112, 128 114. 12-108 115, 12-106, 121 116, 12-108 117, 12–109 118, 12–110