பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

r. 287 ஆங்கில வைத்தியர்கள் மிஸ்தர் கனடின் என்றொரு ஆங்கிலேய வைத்தியர் கி. பி. 1797இல் பேசப்பெறுகிறார்." இவர் சிவாஜி சாம்பாஜி பண்டிதருக்கு மருந்து கொடுத்து நோயைப் போக்கியவர். ஆகையால் இந்த ஆங்கிலேயருக்கு 1000 வராகன் அளிக்கப்பெற்றது. * இரண்டாம் சரபோஜி 1920-21இல் காசிக்கு யாத்திரையாகச் சென்றார். அப்பொழுது ஸ்ட்டன் ' என்ற ஆங்கிலேய மருத்துவரை அழைத்துச் சென்றார். ஆனால் டாக்டர் ஸ்ட்டன் 10-7-1821இல் காசியில் இறந்து போனார். இச்செய்தி வங்காளத்திலிருந்த கவர்னர் ஜெனரலுக்குத் தெரிவிக் கப்பெற்றது. டாக்டர் தலநைன் மக்லோட் என்பவர் டாக்டர் ஸ்ட்டனுக்குப் பதிலாக நியமிக்கப்பட்டு 25-9-1821இல் காசியை அடைந்தார்.18 டாக்டர் ஸ்ட்டன் அவர்கட்கு மாத ஊதியம் ரூ. 700; அவரிடம் உதவியாக இருந்த இந்திய மருத்துவருக்கு ரூ. 20." டாக்டர் ஸ்ட்டன் ஊதியம் பின்னி கம்பெனியாரிடம் கொடுக்கப்பெற்று வந்தது. அவர் இறந்துபோனதும் உடன் இருந்துவந்த இந்திய வைத்தியர் சொற்படி டாக்டர் ஸ்ட்டன் அவர்கள் வீட்டில் சம்பளப் பாக்கி கொடுக்கப்பட்டது. சரபோஜி காசி யாத்திரையில் இருந்தபொழுது தஞ்சையில் இருந்த ஆங்கிலேய வைத்தியர் ஸர் தாமஸ் சிவேஸ்தர் என்பவர் ஆவர் என்றும், சிவாஜிக்கு அவர் வைத்தியம் செய்தார் என்றும் ஒரு குறிப்பு உள்ளது.20 அங்ங்ணம் வைத்தியம் செய்தமைக்கு வைத்தியருக்கு 100 புலி ஹோன்னங்கள் கொடுக்கப்பட்டன." 1827இல் சரபோஜி கண் வைத்தியம் செய்துகொண்டார் ஆதல் வேண்டும். சென்னையினின்று டாக்டர் மெக்யாவின்' என்பவர் வந்து கண் வைத்தியம் செய்தார்." இந்த ஆங்கிலேய டாக்டருக்கு ரூ. 4000 இனாம் வழங்கப்பெற்றது." உடன் இருந்த டாக்டர் சிவேஸ்தருக்கு ரூ.100 வெகுமதி தரப்பெற்றது." தன்வந்தரி மகால் பற்றிச் சரஸ்வதி மகாலிலிருந்து வெளியிடப்பெற்ற கட்டுரையில் மூன்ருவது பக்கத்தில் கண் மருத்துவருக்கு ரூ. 4000 கொடுத்தது அவர் தங்கியிருந்து கண் மருத்துவம் செய்த கால முழுமைக்கும் கொடுக்கப் பெற்றதா அல்லது ஆண்டு ஊதியமா எனத் தெரியவில்லை என்றும், ஆவணங் 15, 4–384 16, 5–66 17. 5-85, 86 18, 5-119 19, 5–77 20. 5-69, 197, 198 21. ச. ம.மோ. த. 17.42, 2-29 22. Dr. MC. Bean 23, 2–277, 278 24. ச. ம. மோ. த. 9-16 25, ச. ம. மோ. த. 2.82 -- - --