பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/328

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

3.18 "1735 : துளஜா ராஜா கைலாஸ்வாஸி ஆனதற்கு செள. ராஜ குமாரம்பா உடன்கட்டை ஏறினார்' என்றொரு குறிப்பு உள்ளது. 1735 என்று ஆண்டு குறிக்கப்பட்டிருத்தலால் துக்கோஜி எனப்பட்ட முதலாம் துளஜாவின் மனைவியருள் ஒருவராகிய ராஜ்குமாரா பாயி என்பவர் உடன்கட்டை ஏறியிருத்தல் கூடுமென ஊகிக்கலாம். ஆனால் இச்செய்தி போன்ஸ்லே வமிச சரித்திரத்தில் குறிப்பிடப் பெறவில்லை. இரண்டாம் துளஜாவுக்கும், ராஜகுமாரம்பா என்றொரு மனைவி இருந்தார்.அ அவர் உடன்கட்டை ஏறினரோ என்று கொள்ளலாம் எனினும் போன்ஸ்லே வமிச சரித்திரம் இதற்குச் சான்று பகரவில்லை. - ஸ்வார்ஷ் பாதிரியார் பற்றி ஒரு நூல் உள்ளது. அதில்" துளஜா அரசர் இறந்த செய்திபற்றிப் பின்வருமாறு எழுதப்பெற்றுள்ளது: “The body of the Rajah was burned ; but no female was immolated on the funeral pile (serving to enrich the priest by means of the jewels of the women who are thus cruelly and untimely sent out of the world.)” இதனால் துளஜா அரசர் இறந்தபொழுது அரசமாதேவியர் எவரும் உடன்கட்டை ஏறியதாகத் தெரியவில்லை."அ == அமர்சிங்கர் துளஜாவுக்குப் பிறகு 1788 முதல் 1798 வரை ஆட்சி புரிந்தவர். இவர் 1802இல் இறந்தபொழுது அவரது இரண்டு மனைவியர் ஈமத்திப்புகுந்து உயிர் மாய்ந்தனர் என்று கூறப்படுகிறது." இரண்டாம் சிவாஜி மன்னர் தம் தமக்கைகள் மூவரின் 3 பெண்களைத் திருமணம் செய்து கொண்டார். மூத்த மனைவியாகிய சைதம்பாபாயி, இளைய மனைவியாகிய பத்மாம்பாபாயி ஆகிய இருவரும் சிவாஜி இறப்பதற்கு முன்ன தாகவே இறந்துவிட்டனர். எஞ்சியவர் காமாட்சியம்பாபாயி சாகேப் ஒருவரே. தமக்கு ஆண் சந்ததியில்லையே என்ற கவலையால் தான் இறப்பதற்கு 3 ஆண்டுகட்கு முன்னர் அதாவது கி. பி. 1852இல் 17 பெண்களை ஒரே நாளில் சிவாஜி மணம் செய்துகொண்டார். அவர்களுள் இருவர் சிவாஜி இறப்பதற்கு முன்னமேயே இறந்துவிட்டனர். எனவே சிவாஜி இறந்த 5, 3–266 5.அ. போன் ஸ்லே வமிச சரித்திரம், தமிழ் - பக்கம் 109 6. P. 138, Part ||, Memoirs of C. F. Schwartz 6 sy. “Tulaja died at the age of 49. Two of his queens committed Sati” K. Subramanian — Maratha Rajahs of Tanjore, P. 66. Qā ātāshion to பொருந்தும் என்பது விளங்கவில்லே. 7, p. 144, Administration and Society in the Carnatic, 1701 - 1801, Dr. K. Rajayyan-Sri Venkateswara University Publication - Historical Series, Number 7 (1966). 8. P. 838, Tanjore Manual (Part V, Political History, Chapter IV)