பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/330

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 தேவதாசிகள் - பெண்களை விற்றல் கோயில்களில் கோயிற் பணிகளைச் செய்ய மகளிர் நியமிக்கப் பெற்றி ருந்தனர். சிலர் சுவாமி உலாப்போகுங்கால் நாட்டியம் ஆடுதலும் உண்டு. நல்ல இசை வாய்ப்பு உடையவர்கள் ஆடலுடன் பாடுதலும் உண்டு ஆகவே முன்னாட்களில் தளிப்பெண்டுகள் எனப் பெற்றவர் கோயில் பணிவிடை செய்து வந்தமையோடு, இசை நாடகம் நாட்டியம் ஆகியவற்றை வளர்த்தனர் என்னலாம். அன்னோருட் சிறந்தவர் "தலைக்கோல்' பட்டம் பெற்றனர். அத்தகைய தளிப்பெண்டுகள் 360 பேர் தஞ்சைப் பெரிய கோயிலில் நியமிக்கப் பெற்றிருந்தனர் என்று முதலாம் இராசராசசோழனின் தஞ்சைப் பெரியகோயில் கல்வெட்டு விவரிக்கிறது. இங்ங்னம் கோயில் பணியில் இருந்தவர்கள் பொதுமகளிர் என்றோ விலை மகளிர் என்றோ கருதுவதற்கு இல்லை. அன்னோர் மணவாழ்க்கை விரும்பினால் கோயில் பணியைத் துறந்து மணவாழ்க்கை கொள்வதும் உண்டு. ஆனால் பிற்காலத்தில் பெண்களைக் "கோயிலுக்குப் பொட்டுக் கட்டுதல்" ஆகிய பழக்கம் வந்துவிட்டது. தஞ்சை மராட்டியர் காலத்துக் கோயில்களில் பலர் பொட்டுக் கட்டிக்கொண்டனர் என்றும், அன்னோர் தேவதாசிகள் எனப்பெற்றனர் என்றும் தெரியவருகிறது : ' 1819: தேவஸ்தானம் முக்தம்பாள்புரம் காசிவிசுவநாத சுவாமி கோயில் தாசி ஹீரா கோவிலில் பொட்டுக்கட்டிக் கொள்வதற்கு வழக்கம் போல் சத்திரம் ஐவேஜில் கொடுக்கிறது" - 1. S. I. Vol. II 2. ச. ம. மோ, த. 9-18 41.