பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/334

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

325 5-8-1825; ரெஸிடெண்டு ஆற்றுப் பெருக்கைக் காண்பதற்கு ஹெளதாவில் வீற்றிருந்து செல்கிறார்; தேவதாசி அங்கு' என்பவளின் மகள் " நாகூ ” என்பவள் வண்டியில் உட்கார்ந்து வருகிறாள். எதிரில் வந்த நாகூ இருந்த வண்டியை வண்டிக்காரன் ஓரமாக ஒட்டாமல் ரெஸிடெண்டு துரைக்கு எதிரே கொண்டுவந்தான். இக்குற்றத்துக்காக நாகுவிற்கு ஒரு சக்கரம் 2 பணம் அபராதம் விதிக்கப்பட்டது. இங்ங்னம் தாசிகட்குத் தண்டனை விதிக்கப்பட்டதுமுண்டு. சில தேவதாசிகள் சிலரால் துன்புறுத்தப்பட்ட செய்திகளும் தெரிய வருகின்றன. அவ்வமயங்களில் அன்னோர் அரசின் ஆதரவைத் தேடி அலைந் தனர். பிறருடைய கெட்ட நடத்தையினால் தேவதாசிகள் தொல்லைக்குள்ளா னார்கள் என்பது அவ்வாவணங்களால் அறியப்பெறும்: " கோட்டைக்குள் மேலவீதி கொங்கணேசுவரசுவாமி கோவிலுக்கு அடுத்த சந்திலிருக்கும் ராவ் சாயபு அவர்கள் என் வீட்டுக்கு வரத்துப் போக்காயிருந்தார். இப்படியிருக்க டிெயார் நாளடைவில் நடக்கப்பட்ட நடவடிக்கை எனக்குச் சம்மதம் இல்லாததினால் நான் வரவேண்டாம் என்று சொன்னதைப்பற்றி டிெ ராவ் சாகேபு என்பவர் நான் கோவிலுக்கு வரும்போதும் அடித்துத் தொந்தரவு செய்ததைப்பற்றி அமீனா அவர்களிடத்துச் சொல்லிக்கொண்டதற்கு அமீனா அவர்கள் சேவகனை என்கூட அனுப்புவித்ததின்பேரில் அப்பால் என்கூட சேவகனும் இருக்கும்போது ராவ் சாகேபு கற்களால் அடித்துத் தொந்தரவு செய்தார் .................. 17-2-1846 ' - இங்ங்னம் தொல்லைக்கு உள்ளானவர்களும் உண்டு. பெண்களை விலைக்கு வாங்கித் தாசிகளாக ஆக்கியதோடன்றிச் சிலரை வேலைக்காரிகளாவும் ஆக்கியுள்ளனர். இங்ங்னம் விலைக்கு வாங்கப் பெற்றவர் அடிமைகள் போல் - அடிமைகளாகவே இருந்து தம்மை விலைக்கு வாங்கியவரிடத்தில் ஆயுள் முழுவதும் வேலை செய்து மடிந்தனர். வெள்ளையரும் இவ் அடிமை வாணிபத்தில் ஈடுபட்டிருந்தனர் என்பது, ' சென்னையிலிருந்து லாட் பிகட் 16 பெண்களைத் தஞ்சாவூருக்கு அனுப்பினார்" என்ற ஆவணக்குறிப்பினால் அறியப்பெறும். குழந்தைகளாக இருக்கும் பொழுதே விலைக்கு வாங்கிவிடுவர் போலும். (1776 ) ஹ-ஜுர் குழந்தையை வாங்கினதற்குப் பரங்கிப்பேட்டை வராகன் 8 என்ற குறிப்பு" இதற்கு ஆதரவாக உள்ளது. 17.1-269 18. 6-402, 408 19. 2-141