பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/336

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

327 இதனால் பெண்களை அடைமானமாக வாங்கிப் பின் அவர்களை விற்றலாகிய செய்தியும் பெறப்படும். இது நிலங்களை ஒற்றி வைத்துப் பணம் பெறுவது போன்ற செயலுக்கு ஒப்பாக உள்ளது. குறைந்த வயதுடைய பெண்களையே விற்றல் வாங்கல் நடைபெற் றுள்ளன என்பது பின்வருவனவற்றால் நன்கு அறியப்படும் " சிதம்பரம் பிள்ளை அலிகானா சந்திலிருக்கும் வெள்ளாளர் அப்பு பிள்ளை பெண் சாதியின் பெண் காவேரி - வயது 12 - கிரயம் 10 சக் ". நி1 அப்ர்ாவ் காடிகே வைப்பாட்டி லெகஷ்மியின் பெண் சீதாபாயின் வயது 10 சர்க்காரில் விலைக்கு வாங்கினது. ' #. நாடகசாலையில் கிருஷ்ணாவின் பெண் செல்லம் - வயது 10 சர்க்காரில் கிரயம் சக். 10 - எழுதியவாத்தியாருக்கு 2 பணம் ” சுப்பராய பிள்ளை பெண் சாதியின் சகோதரி கருப்பாயி-வயது 11 - கிரயம் 35 சக். - எழுத்துக்கூலி 2 பணம் ” ட இவற்றால் சொந்த மனைவிக்குப் பிறந்த மகளையும், வைப்பாட்டியின் மகளையும், மனைவியின் உடன்பிறப்புக்களையும் விற்றனர் எனத் தெரிகிறது. முஸ்லிம்களும் சர்க்காருக்குத் தம் பெண் குழந்தையை விற்றமைக்குப் பின்வருவது சான்றாகும் : இப்ராம் ஸாதான் வளர்த்துவந்த துலுக் கப் பெண் ஹமீன்வடிா - வயது 6 - சர்க்காரிலே கிரயம் சக் 6.” விட்டில் பெற்றோர் இல்லாத நேரத்தில் பெண்களைப் பிடித்துக் கொண்டு போய் அரண்மனைக்கு விற்றதாகவும் ஒராவணத் தகவல் உண்டு." இங்ங்னம் செய்தமை அரண்மனை மாதரசிகளுக்குப் பணிவிடை அல்லது வேலைகள் செய்வதற்காகவேயாம் என்று ஊகித்தறியலாம்." புதிய கல்யாண மகாலுக்கு வாங்கிய பெண்களில் 25 பேர்களை அவரவர்களிடம் இருந்த தஸ்தாவேஜிகளை வாங்கி ஆஸாமிக்கு 3 வாங்கி வெளியே விட்டார் " என்ற குறிப்பு, அங்ங்னம் விலைக்கு வாங்கப்பெற்ற பெண்களை மீண்டும் விடுதலை செய்தார்கள் என்பதற்குச் சான்றாகும். கல்யாணம் ஆன பெண்களையும் விலைக்கு வாங்கியதாக ஓர் ஆவணம் கூறுகிறது. இது 1842 ஆம் ஆண்டு ஆகஸ்ட்டுத் திங்கள் 10ஆம் நாள் 23. F. le. Gam. &. 8–13 24. 6–876 25. 5-229 (?) 26, 1-200