பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/338

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 கல்யாண மகால் - மங்கள விலாஸ் - அக்காமார் கல்யாண மகால் இரண்டாம் சிவாஜி இறந்த பிறகு ரெஸிடெண்டும் சிரஸ்தேதாரும் ஒரு நாள் அரண்மனையைப் பார்க்க வந்தார்கள். ஆவுசாயேபுடன் பேசி விட்டுப் புறப்பட்டபொழுது, "அஞ்சு அங்கணத்தின் மாடி"யைப் பார்த்து, "இந்த மாடியைக் கட்டியது யார்? அங்கு யார் இருக்கின்றனர்?' என்று அவர்களுள் ஒருவராகிய ரெஸிடெண்டு வினவினார். அவற்றுக்கு விடையாக, "அந்த மாடியைச் சரபோஜி கட்டினார்; அங்கே கல்யாண மகால் மங்களவாஸம் சேர்ந்தவர்கள் இருக்கின்றார்கள்" என்று கூறினர். "அந்தப் பெண்க ளெல்லாம் தாசிகளா?" என்று ரெஸிடெண்டு வினவச் சிரஸ்தேதார், "அவர்கள் மானத்துடனும் கெளரவத்துடனும் ஒரே புருஷனிடத்தில் இருப்பவர்; புருஷனுக்குப் பின்னர்ப் பிழைத்திருக்கும் வரையில் வெளியில் போகாமல் புருஷன் இறந்தபின்பு பெண்கள் இருக்க வேண்டிய முறைப்படி இருப்பார்கள்" என்று கூறினார்.8 இரண்டாம் சரபோஜியின் காமக்கிழத்தியர்கள் தங்கியிருந்த இடம் ' கல்யாண மகால்" எனப்பெற்றது.க இது கி. பி. 1824இல் அமைக்கப் பெற்றது. இரண்டாம் சரபோஜி கைலாஸ்வாஸி ஆனபொழுது கலியான மகாலில் 24பேர் இருந்தனர் என்று தெரிகிறது. அவர்களுக்காக நிலமும் பணமும் ஒதுக்கிவைக்கப்பெற்றன. கல்யாணமகாலைச் சேர்ந்தவர்களாக -- 1. 4-119 2, 4-180 3. 4-131 33. “It (Kalyana Mahal) is said to be the residence of the concubines of of Serfoji” - P. 6, Deposition of W21 (O.S. No 26 of 1912) 4. தஞ்சை ஜில்லா மானுவல், பக்கம் 826 - 827 42