பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/35

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25 பிறந்தனர். இவர்களைவிட்டு அபரூபாயி இறந்துபோனார். இவ்விரு குழந்தைகளும் (மாருதி சாயேயும், சாந்தாபாயும்) அப்துல் பிரதாபரா ஜா இறந்த ஆண்டிலேயே இறந்தனர். இந்த மாருதி ராஜாவாகிய பெண் வயிற்றுப் பேரனை அரசச் செல்வத்துக்கேற்பத் துளஜா வளர்த்தார் என்பது பின்வரும் குறிப்பால் அறியலாம்:" 'ராஜேபூரீ மாருதி சாயேபுக்கு அக்ஷராரம்பத்துக்கு உயர்ந்த ஆட்டுக்கடா உலுப்பைகள் 50 கொடுக்கிறது. டிெ சாயேப் அகூடிராரம்ப சாமான்களில் வெள்ளி சிலேட் 15 வராகன் எடை : எழுதுகோல் தங்கம் , வராகன் எடை'. நாகூர் அtளித்தமை : இரண்டாம் துளஜா 1788இல் 277 ஊர்கள்ைக் கும்பினிக்கு அளித்தார் என்று தெரிகிறது." இதுபற்றிய இரு எழுத்துச் சான்றுகள் பின்வருமாறு : - -- "11-6-1779. நாகூரைக் கும்பினிக்கு ஜாகீர் கொடுத்ததற்குக் கறார்நாமாவை எழுதிக்கொடுக்காமல் நாகூரை நீங்கள் கும்பினிக்குக் கொடுத்த தொகைக்குக் குறைவாகக் காணப்படுகிறது..." - "24-6-1779. கும்பினிக்கு நாம் ஜாகீர் கொடுத்ததில் 30 கிராமங்கள் குறைவாகக் கொடுத்தோம் என்று கெளனர் அவர்கள் சொன்னதாக ...... கீளுர் மகாலில் இத்தனை கிராமங்கள் என்று எழுதியிருக்கிறது.' மேற்கண்டவாற்றான் 'ஜாகீர்’ செய்த 277 ஊர்களைப்பற்றி ஏதோ வேறுபாட்டுணர்ச்சி வந்திருக்கலாம் என்றும் அதனை அரசர் தீர்த்தனர் என்றும் ஊகித்தறியலாம். கோட்டைகள் : துளஜா ராஜாவின் காலத்தில் இருந்த கோட்டைகள் பற்றி ஒரு ஆவணத்தில்" சொல்லப்பட்டுள்ளது. அவை: பந்தநல்லூர், திருக் காட்டுப்பள்ளி, சாக்கோட்டை, மகாதேவபட்டணம், பட்டுக்கோட்டை, அறந்தாங்கி என்பவை. இவற்றுக்கும் பாதைகள் அமைக்க முயற்சி எடுத்துக் கொண்டதாகத் தெரிகிறது. 58. பக்கம் 125, போன் ஸ்லே வம்ச சரித்திரம் “The premature death of his only son, a daughter and grandson filled him (Tulaja II) with remorse and agony” – P. 313, Maratha Rule in the Carnatic — Srinivasam, C. K. H 59. ச. ம. மோ, த. 8-29 60. Further more he (Tulaja II ), granted in 1788 to the Company 277 Villages known as the Nagore settlement saving the ryots’ shares and inams to Temples Choultries and Brahmans.”— P. 306, Maratha Rule in the CarnatiC. |-- 61. 5 - 395 62. 3-163 4