பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/370

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

361 தரப்பெற்றது. கி. பி. 1771இல் திருபுவனத்துக்கு "அமர்சிங்க மகாராஜபுரம்" என்று பெயர் வைக்கப்பட்டது. விளங்குளம் என்ற ஊர்க்குச் சுலக்ஷணம்பாபுரம் என்று பெயரிடப் பெற்றது." குதிரை யானை முதலியவற்றுக்குப் பெயர்கள் மக்கள் தாம் விரும்பும் அல்லது வளர்க்கும் உயிரினங்களுக்குப் பெயர் வைப்பது கண்கூடு. அந்த முறையில் மராட்டிய அரசில் யானை முதலியவற் குப் பெயர் சூட்டியிருந்தனர். o குதிரைகட்குச் சம்பூரண பிரசாத்", கிரி ராஜ்", லகஷ்மி வதா", லசஷ்மி ராஜ ஸாம்ராட்" என்ற பெயர்கள் இடப்பெற்றிருந்தன. யானைகளுக்குப் பட்டாபி ராம்", மோதி ராஜ்", விட்டலப் பிரசாத்,ே ஸிரதா ராஜ், மாணிக்க ராஜ்", பவானி பிரசாத், கோதாவரி பிரசாத், விஜய ராமபாணா, சுக்கிரதீப, வல்லி பிரசாத், சரஸ்வதி பிரசாத், அன்னபூர்ணா பிரசாத்", விஜயலகஷ்மி" என்று பெயர்கள் இடப்பெற்றிருந்தன. யானைக்கன்றுகளுக்குச் சம்பு பிரஸாத்", கன்னியாகுமாரி", ஸரஸ்வதி பிரசாத்", பவானி பிரசாத்", காமாட்சி", பார்வதி", ஜாவ்ஜி பிரசாத்' என்பன பெயர்களாம். ராஜஸபாயி அமணி ராஜே இடம் இருந்த யானைக்குத் தரும சம்வர்த்தனி என்று பெயர்.' இது 1850இல் இறந்துவிட்டது. 1846இல் வைத்தீசுவரன்கோயிலில் தையல்நாயகி என்ற யானையும், திருவாலங்காட்டில் பெரியநாயகி என்ற யானையும், மன்னார்குடியில் செங்கமலம் என்ற யானையும், திருபுவனத்தில் தர்மசம்வர்த்தனி என்ற யானையும் இருந்தன." 1814இல் வைத்தீஸ்வரன் கோயிலுக்கு ஒரு யானைக்கன்று அளிக்கப் பட்டது. அதற்கு ஆனந்தவல்லி' என்பது பெயர். 91, 7–658 92. ச. ம. மோ, த. 7-9 93. 5-8 94, 1–228 95. 1-241 96. 2–178 97, 2-194 98, 1-166 99. 1-238 100, 5–809 101, 5-45 102 ச.ம. மோ. த. 8-19 103. ச. ம மோ, த, 4-10 104. 1-28 105. 1-286 106, 1–327 107. 1-328 108. 5-440 109. 5-217 110. 2–261 111. ச. ம. மோ. த. 5-4. 112, 4–311 113. 2-259 46