பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/372

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

363 கொடியேற்றும் நாளில் " சுவாமி சன்னதியில் பூர்ண கும்பத்தில் மந்திரித்துத் தீர்த்தத்தை ஸ்தாபனம் செய்து பின் துவஜஸ்தம்பத்திடம் வைத்துப் பூசை செய்து தீர்த்தம் வழங்குவர். முதலில் தீர்த்தம் வாங்குபவருடைய மனோரதம் நிறைவுறும். அத் தீர்த்தத்தைக் கொணர்ந்து பூரீமந்த் பூரீசாயேபும் செள. பாயி சாயேபுகள் இருவரும் ஸ்நானம் செய்யவேண்டும் ; அப்படிச் செய்தால் புத்திரன் உண்டாம் ' என்று ஒரு ஆவணத்தில்' உள்ளது. " ஒரு கோடி ஸ்ந்தான கோபால மந்திரம் ஜபித்துப் பன்னிரண்டு கிராம்பு புத்திர சந்தானம் உண்டாவதற்காகக் கொடுப்பது ' என்று பிறிதொரு குறிப்பு' உள்ளது. " மேலே கண்ட மந்திரத்தை ஜபித்து அந்த ஜபத்தின் பிரபாவத்தினால் பஞ்ச பாண்டவர்கள் தோன்றினர். செளபரி என்ற மந்திரத்தை ஜபித்து ஒருவனுக்கு ஆயிரக்கணக்கான புத்திரர்கள் தோன்றியுள்ளனர். இந்த மந்திரத்தை நேரில் உபதேசிக்க வேண்டும்' என்று ஒருவர் மன்னருக்கு எழுதியுள்ளார்." - "மாசி மாசம் சுக்லபக்ஷம் திவிதியை திருதியை வெள்ளிக்கிழமை வியதிபாதம் இவை சேர்ந்தால் அது ஒரு சிறந்த காலம். அத்தகைய நாளில் புத்திர சந்தானத்துக்குப் பாயளலம் தானம் செய்யவேண்டும் என்பது ஸ்காந்த புராணம் மாக மான்மியத்தில் இருக்கிறது. இப்பொழுது எல்லாமும் சேர்ந்திருக் கிறது. அன்று பாயஸம் செய்து ஸ்வாமிக்கு நிவேதனம் செய்து ஜபம் செய்யும் பிராமணர்களுடன் 40, 45 பேருக்குத் தகூடிணையும் தரவேண்டும் ' என்று கூறியதற்கிணங்கத் தரப்பட்டது.' " மேலும் பாத்ரபதம் சுக்லபட்சம் புரட்டாசி மாதம் சப்தமியன்று தேவகியம்மையார் தமக்குக் குழந்தை உண்டாகவேண்டுமென்று பன்னிரண்டு ' மாண்டே ' என்னும் பலகாரத்தைச் செய்து ஒரு பிராமணனுக்குத் தானம் கொடுத்தாள். இதனால் கண்ணன் பிள்ளையாகப் பிறந்தான். ஆகவே மாக மாசம் சுக்லபக்ஷம் இரத சப்தமி உத்தமமான நாள்; இன்று " மாண்டே ' செய்து 12 வருஷங்களுக்கு உரிய அத்தனையும் ஒரே நாளில் 12 பிராமணர்களுக்கு 12 வீதம் தாம்பூலம் தக்ஷணையுடன் கொடுக்கவேண்டும்" என்றமைக்கேற்பக் கொடுக்கப்பட்டது." -- -இதுகாறும் கூறப்பெற்றவை இரண்டாம் சிவாஜி காலத்தனவாகலாம். 118. 1-86 119. 1–38 120. 1-88, 89 121. 1-39, 40 122. மாண்டே, ரவாவினால் செய்யப்படும் பணியாரம் ; கூடையைக் கவிழ்த்தாற் போலிருக்கும் : 1-41 - 123, 1–41, 42