பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/373

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

364 கி. பி. 1776இல் இரண்டாம் துளஜா காலத்தில், " சந்தான கோபால கிருஷ்ண ஜபம், இரண்டாவது மண்டலம், 45 நாட்களுக்கு 54 சக்கரம் ; நாள் ஒன்றுக்கு 12 பணம் வீதம்' என்ற குறிப்பினால்' துளஜா காலத்திலும் இம்மந்திரம் 90 நாட்கள் புத்திரப்பேற்றின் பொருட்டு ஜபம் செய்யப்பெற்றமை அறியலாம். = பஞ்சாங்கம் தயாரித்தல் பஞ்சாங்கம் என்பது திதி வார நக்ஷத்திரம் யோகம் கரணம் ஆகிய ஐந்தையும் காட்டும் நாட்காட்டியாகும். தஞ்சை மராட்டிய மன்னர்கள் தாம் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பஞ்சாங்கங்கள் கணிக்கச் செய்தனர். கி. பி. 177இல் பஞ்சாங்கம் கணிப்பவராக எட்டுப் பேர்களின் பெயரை ஒரு ஆவணம்' கூறுகிறது. அவர்களுள் நால்வருக்கு ஆண்டொன் றுக்கு 150 கலம் வீதமும், எஞ்சிய நால்வருக்கு 100 கலம் வீதமும், ஆக 1000 கலம் நெல் தரப்பெற்றது. கி. பி. 1798இலும் பஞ்சாங்கம் கணிப்பவர் எண்மர் இருந்தனர். அவர்களுக்கு 1000 கலம் நெல் தரப்பெற்றது என்று ஓராவணக்குறிப்பு' உள்ளது. அச்சில்லாத காலத்தில் அவை கையால் எழுதப்பட்டனவாதல் வேண்டும். கி. பி. 1814க்குரிய குறிப்பினின்று' பஞ்சாங் கங்கள் அச்சிடப்பெற்றன என்று அறிய வருகிறது.' ஆண்டுதோறும் வருஷப்பிறப்பு நாளில் பஞ்சாங்கம் படிக்கப்பெற்றதாதல் வேண்டும்' கி. பி. 1801க்குரிய குறிப்பு" பஞ்சாங்கம் கணிப்போருக்குக் கொடுக்கப்பெற்றுவந்த மான்யம் ' (ஊதியம்) படிப்படியாகக் குறைக்கப் பெற்று வந்தமை தெரிவிக் கிறது. அலுவலர்கட்குக் கட்டுப்பாடுகள் 2-3-1827 இல் (கலெக்டர்) ஆணையொன்று" அலுவலர்கட்குச் சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக உள்ளது. அது பின்வருமாறு : ' கலெக்டர் கச்சேரி உத்யோகஸ்தர்கள் வீட்டுக்கு மிராசுதார்களோ அல்லது அவர்களுடைய காரியஸ்தர்களோ போகக்கூடாது. உத்தியோகஸ் தர்களும் மிராசுதாரர்கள் அவர்களுடைய காரியஸ்தர்கள் வீட்டிலோ வேறு எந்த இடங்களிலும் இரகசியமாய்ப் பேசக்கூடாது. உத்தியோகஸ்தர் ஒருவருடைய வீட்டுக்கு மற்றொருவர் சென்று அரசுச் செய்திகள் பேசுவதும் யோசனை செய்வதும் கூடாது. இதுபற்றித் தெரிந்தால் அவர்கள் நீக்கப் பெறுவர்; அபராதமும் செலுத்தவேண்டிவரும். ' -இத்தகைய ஆணை கும்பினியார் ஆட்சியைக் கைப்பற்றிய காலத்ததாகும். 124. 1-156 125. ச. ம. மோ. த. 15-20 126. ச. ம. மோ, த, 7-40 127. 2–257 128. 2–257 129. 5-222 130, 4-848; 2-279; ச. ம. மோ. த. 5-5 131. 1-57, 58; ச. ம. மோ. த. 24-87