பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/396

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

387 தொப்பி - முண்டாசு மேஸ்தர் டானியல் கொலப் மூலம் தொப்பி ஒன்று விலைக்கு வாங்கின தற்கு 4 வராகன் கொடுக்கப்பட்டது” என்ற குறிப்பால் வெள்ளையர் அணிந்தாற்போன்ற தொப்பி (Hai) க்கு விலை மிகுதியாயிருந்தது என்று அறியப்பெறும். வெள்ளையர் தொப்பிகள் இந்நாட்டுக்குப் புதியவை ஆதலின் மிகுந்த விலை போலும். " முண்டாக வெள்ளை 1க்கு விலை 2 சக்கரம் " என்றொரு குறிப் பினால் முண்டாசு தொப்பியினும் பன்மடங்கு குறைவான விலையில் கிடைத்தமை தெரியவருகிறது. துப்பாக்கி 1776: துப்பாக்கி விலை பரங்கிப்பேட்டை வராகன் 1; இதற்குத் தரகு இல்லை " என்ற குறிப்பால்" துப்பாக்கிகளின் விலை அறியப்பெறும். இதற்குத் தரகு (கழிவு-Commission ) இல்லை என்றமையால் இத்தகைய பிற போர்க்கருவிகட்குத் தரகு உண்டு என்பது போதரும். பிராந்தி - சாராயம் பிராந்தி சாராயம் முதலியவற்றைக் குடிப்பவர் அந்நாளிலும் பலர் இருந்தனர். பிராந்தி மருந்தாகவும் பயன்படுத்தப்பெற்றது." " யந்திரச் சிப்பாய் குதிரைமேலிருந்து விழுந்தவனுக்குப் பிராந்தி சீசா 1க்கு ரூ. 14 க்கு வாங்கிக் கொடுத்தது ' என்ற குறிப்பால்' பிராந்தி ஒரு புட்டியின் விலை ரூ. 1-12-0 என்று தெரிகிறது. சர்க்காரிலும் சாராய விற்பனையுரிமையைக் கொண்டிருந்தனர். " 1811: கோட்டையில் காளேராவ் அப்பா காலத்தில் 10 சேர் செம்பினால் செம்பொன்றுக்கு 8 பணம் வீதம் விற்று ஒரு பணம் சம்பளம் போகப் பாக்கி 7 பணத்தைச் சர்க்காரில் வாங்கிக்கொண்டு வந்தார்கள் ' என்ற குறிப்பால்" ஒரு செம்பு சாராயம் 8 பணம் என்று தெரியவருகிறது. செம்பு என்பது 4 புட்டி என்றும், கோட்டைக்கு வெளியிலே சிலர் சாராயக்கடை வைத்திருந்தனர் என்றும் இந்தக் குறிப்பிலேயே அடுத்துக் காணப்படுகிறது. _ 38. ச. ம. மோ. க. 2-80 39, 11-225 40, 2-141 41. ச. ம. மோ, த. 5-27 42. 2-83, 84