பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/400

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

391 மேலேகண்ட குறிப்புக்களால், காவிரி பாயும் நாடு முழுவதிலும் படகுகளைக் கட்டும் தொழில் பெருவாரியாக இருந்தமை பெறப்படும். அப்படகுகள் இடத்துக்கேற்பப் பெரியனவும் சிறியனவும் ஆக இருந்தனவாதல் வேண்டும். இங்ங்னம் ஆறுகளைக் கடக்கப் படகுகள் பயன்பட்டமையோடு வெள்ளைக்காரர்கள் கேளிக்கைக்காகவும் அப்படகுகளைப் பயன்படுத்தினர். "11-6-1849 ரெஸிடெண்டு ஸர்கேலுக்கு எழுதிய கடிதம் : வெள்ளைக்காரருடைய வேடிக்கைக்காகக் கோடிக்கரையில் வைத்திருக்கும் படகுகளை ஸர்கேல் தயவு செய்து மகாராஜா சாயேபின் உத்தரவு பெற்றுக் கொண்டு கொடுத்தால் ரெஸிடெண்டுக்கு வெகு உபகாரமாயிருக்கும் " என்ற கடிதத்தினால் படகுகளைக் கேளிக்கைக்காகச் செலுத்துவதற்குப் பயன்படுத்தியமையும் தெரியவரும். வேதாரண்யம் கோடிக்கரை முகாமினின்று, ' இரண்டு தோணிகள் தயாரிப்பதற்குப் புன்னைக்காய் மரங்களும் பலகையும் வருகின்றன ; விட்டுவிடுக” என்று சுங்கத்துறைக்கு 1811இல் ஆணை பிறப்பித்ததாக இருக்கும் குறிப்பு, தோணிகள் செய்வது பற்றி அறிவிப்பதாய் உள்ளது. கப்பல் கட்டுதல் அரசருக்குச் சொந்தமாகக் கப்பல்கள் இருந்திருத்தல் வேண்டும் ; ஆனால் பழமையான சான்றுகள் கிடைக்கவில்லை. எனினும் இரண்டாம் சிவாஜி காலத்தில் 25-1-1938ல் ஒரு கப்பல் சர்க்காரிலிருந்து வாடகைக்கு விட்டிருக்கிறார்கள். அந்தக் கப்பலில் அதிகம் பழுதுபார்க்கவேண்டியதில்லை என்றமையால் இரண்டாம் சரபோஜி காலத்திலேயே பெரிய கப்பல்கள் கட்டப்பெற்றனபோலும் என்று எண்ணலாம். e தனியார் கப்பல்கள் கி. பி. 1806க்குரிய ஆவணக்குறிப்பு ஒன்று தனியார் கப்பல்களைப் பற்றிக்கூறுகிறது." கொல்பேனா, மலாக்கா துறைமுகங்களுக்கு முத்துச் சிப்பி 15 தூக்கு, சாமிநாத செட்டியாரின் கப்பலில் நாகூர்த் துறையினின்று ஏற்றியனுப்பினர். ஸேக் மயாரன்கதா என்பவருடைய கப்பலில் முத்துச்சிப்பி 5 தூக்கு அனுப்பப்பெற்றது. இவ்விரு கப்பல்களிலும் ஏற்றிய சரக்கின் மதிப்பு 3344 வராகன் ஆகும். இவற்றை ஏற்றிச்செல்லக் கப்பற்கூலி மேற்படி தொகையில் 5% ஆகும். 5. 6-12 6. 2–120, 121 7. சுமத்ராவுக்குக் கிழக்கே மலேஷியா தீபகற்பத்துக்கு மேற்கில் உள்ளது மலாக்கா கடற்பகுதி. மலேஷியா தீபகற்பத்தின் மேற்குக்கரையில் உள்ளது மலாக்கா.