பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/409

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

400 எழுத்துக்கள் தயார் செய்கிற வேலையைப் பார்த்தார்." அச்சுவேலையில் பிராமணர்களும் ஈடுபட்டனர்." நூல்கள் பல்மொழிகளிலும் அச்சிடப் பட்டிருத்தல் வேண்டும் எனத் தெரிகிறது. இதனுடன் பழுதடைந்த புத்தகங் களைக் கட்டுதல் (பைண்டு) செய்கிற தொழில் அந்நாளிலும் உண்டு எனத் தெரிகிறது." அரண்மனையில் பலவிதத் தொழில்கள் அரண்மனையில் நாடோறும் செய்யவேண்டிய பலப்பல தொழில்கள் உண்டு. அவை ஐம்பத்தாறு வகையின என்று தெரிகிறது." அவற்றுட் சில: o பூசை செய்தல்; வேதங்களைச் சொல்லிக்கொடுத்தல்: காகிதப் புத்தகங்களை எழுதுதல்; ஒலைச்சுவடிகளை எழுதுதல்; தண்ணீர் கொணர்ந்து நிரப்புதல் ; (சத்திரம் முதலியவற்றுள் ) சமையல் செய்தல் கோயில் பரிசாரகம் செய்தல் ; கணக்கு எழுதுதல்; கவிபாடுதல் வேஷம் போட்டுக் கொள்ளுதல்; நட்டுவாங்கம்; விகட கவி பிரசங்கி மிருதங்கம், நாதஸ்வரம் வாசித்தல்; மணி சொல்லுதல்; அரண்மனை வண்டிகளை ஒட்டுதல், கோனார் ( இடையர் ): ஜெட்டி (வஸ்தாது- மல்லர்) , துணி வெளுத்தல்; பூக்காரர்; துணி தைத்தல்' தீவட்டி ஆள்" முதலியன நாடோறும் அரண்மனையில் செய்ய வேண்டிய தொழில்களும், தொழிலாளர் களும் ஆம் பலவிதமான தொழில்களைச் செய்ய அரண்மனையில் 307 பேர் இருந்தனர்." இதுகாறும் கூறப்பட்ட தொழில்கள் எல்லாம் அவ்வத்தொழிலில் வல்லவர் செய்தனவாகலாம். கல்வியும் இன்றி அறிவும் இன்றி, உடல்வளம் மட்டும் உள்ள பல்லோர் கூலிவேலை செய்தே பிழைத்தனர். ஆதல்வேண்டும். ஊர்கடோறும் விவசாயத் தொழிலில் ஈடுபட்டோர் தவிர்த்து அதில் ஈடுபட வாய்ப்பு இல்லாமல் சிலர் இருந்திருத்தல் கூடும். அத்தகையோர் தம் உடல் வலிமைக்கு ஏற்ற தொழில்கள் செய்தனராதல் கூடும். அந்நாட்களில் வண்டிகள் ஒட்டுதல், படகு செலுத்துதல், மாடு, குதிரை" ஆடு முதலிய வற்றைப் பேணுதல் முதலியவை சிலர் செய்தவேலைகள் ஆதல் பொருந்தும். மேலும் பெரிய அலுவலர்கள், அரசர்கள், அரசமாதேவிகள் இவர்களைப் பல்லக்கு மேனா முதலியவற்றில் தூக்கிச்செல்லும் சவாரிக்குச் சிலர் வேலைக் காரர்களாக இருந்தனர். 47. 3-81 48. ச. ம. மோ. க. 1-84; 1-840 49. 4-445 50. 12-148 முதல் 158 வரை 51. ச. ம. மோ, த. 29-10 52. ச. ம. மோ. த. 10-20 53. 12-152இல் 5 ஆவது பத்தி 54. ச. ம. ம்ோ. த. 5-5