பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/415

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

406 W. துபாஷிகளுக்குச் சர்க்காரிலிருந்து சம்பளம் கொடுக்கப்பெற்றது --- என்பது, "1778 ரம்ஜான் தேதி 15-கர்னல் மக்ளின் பரங்கி அவர்களின் மொழி பெயர்ப்பாளர் இவர்களுக்கு மேற்கண்ட வகையில் பரங்கிப்பேட்டை ஹோன்னம் கொடுப்பது என்று கட்டளை வந்தது குறித்துத் தற்போது நடப்புப் புலி ஹோன்னம் கொடுப்பது புலி ஹோன்னம் 1000" என்ற குறிப்பால் ஊகித்தறியலாம்". இவரும் பெருந்தொகைகளை வட்டிக்குக் கொடுக்கும் செல்வந்தராக விளங்கியவர். இதனை,

"கம்பெனிக்குக் ’கொடுக்க மேஸ்தர் ஸிப்பன், மேஸ்தர் ஈபஸ்லிஇவர்கள் துபாஷி பச்சையப்ப முதலியாரிடம் கடன் வாங்கியது புலிவராகன் 10, 000" என்பது வலியுறுத்தும். அரண்மனைக்குக் கடன் கொடுத்தபேர்கள்" என்ற சில குறிப்புக் களில் பச்சப்பமுதலி இடம் பெறுகிறார். பச்சையப்ப முதலியார் வழி வேறு சிலர் கடன் கொடுத்துள்ளனர்: == 1780 : பொன்னி நாராயணப் பிள்ளையிடம் பச்சையப்ப முதலி மூலம் கல்லிழைத்தி நகைகள் 20க்கு மதிப்பு 11060 அடகு வைத்து வாங்கின 8960, வட்டி 1: - என்ற குறிப்பு" இதற்குச் சான்றாகும். - 1788 : பொன்னி நாராயணப்பிள்ளையிடம் " பச்சையப்பமுதலி " மூலம் கல்லிழைத்த மகாதேவபதக்கம் அடகுவைத்து வாங்கினது 689 வராகன், 1. வட்டி" பட்டணம் பானசெட்டியிடம் பச்சையப்பமுதலி மூலம் 50 ஆயிரம் வராகன், 1: வட்டி : "முத்தையா முதலியிடம் பச்சப்ப முதலி மூலம் 15 ஆயிரம் வராகன் கடன் வாங்கியது" - என்ற குறிப்புக்களும், பச்சையப்ப முதலியார் கடன் வாங்கிக் கொடுக்கும் தரகு வியாபாரம் உடையவராய் இருந்தார் என்பதற்குச் சான்று பகரும். கம்பெனி செய்யும் வியாபாரங்களுக்கும், இவர் உதவியாய் இருந்தார். அணைக்கட்டு வேலைகளைக் கம்பெனி கவனித்து வந்தது. வண்டிகள் பல அவ்வேலையில் ஈடுபடுத்தப்பட்டன. " அவ்வண்டிகட்காக 150 வராகன் -- 82. ச. ம. மோ. க. 18-18 83. ச. ம.மோ. க. 9-19 84. մF- Ա - மோ. தி: 5–46; 6–5 85. சி. டி. மோ, தி: 9-20