பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/429

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

420 29ட9-1821 புருகாபாத் என்ற தங்குமிடத்திலிருந்து வந்த கடிதத்தில் கவர்னர் ஜெனரல் விரும்பியமையின் ஹாஜூரின்படம் மார்பளவு வரையில் எண்ணெய்ச் சாயத்தினால் சித்திரக்காரன் சின்னசாமி நாயக்கனைக் கொண்டு எழுதச்செய்து ரெஸிடெண்டு இடம் கொடுத்து கவர்னர் ஜெனரலுக்கு அனுப்பச்செய்யவேண்டும் என்று கண்டிருக்கிறது." 18 சாதியினருடைய படங்களும் வரையப்பட்டன என்று 1824க்குரிய குறிப்பினால் அறியப்பெறும்." இங்ங்னம் வரைந்தவன் சாரங்கபாணி என்ற பெயர் உடையவன். இவன் 80 படங்களை வரைந்துகொடுத்துப் படம் 1க்கு 1.இரு வீதம் ரூ. 140 பெற்றுக்கொண்டான்." me மேலே கண்ட் சாரங்கபாணிக்கு மாதவூதியம் 3 சக்கரம் என்றும் மற்றொரு ஓவியர் முத்துக்கிருஷ்ணன் - என்பவருக்கு 3 சக்கரம் என்றும் ஓராவணம் கூறுகிறது." விட்டோபாவின் திருவுருவம்" கண்ணன் நான்கு கைகளுடன் தொட்டிலில் படுத்துத் தன்கட்டை விரலை வாயில் வைத்துக்கொண்டிருப்பது போன்ற திருவுருவம்' போன்றவையும் வரையப்பெற்றன. சித்திரம் கோவிந்தசாமி என்றவர் 1831இல் இரண்டாம் சிவாஜியின் உருவம் எழுதிக் கொடுத்து ரூ. 200 பெற்றுக்கொண்டார்.: கி. பி. 1832இல் சிவகங்கைக் கோட்டை அரண்மனையில் ஓவியர் மூவர் பணியிலிருந்தனர் என்றும்." போதே மகாலில் கிருஷ்ணா என்றொருவர் புதுச்சேரியிலிருந்து வந்திருந்தார் என்றும் தெரியவருகிறது. கி. பி. 1836இல் சாரங்கபாணி என்றொருவர் இருந்தார். அவர் கோபுரங்கள் சிலவற்றை எழுதிக் கொண்டு வருவதற்காகச் சென்றிருந்தார் என்று ஓராவணக் குறிப்புள்ள து." --- ஒவியத்தில் விருப்புடையவராய் இருந்தமையின், 1841இல் கியாப்டன் ஹாரிஸ் என்பார் ஆப்பிரிக்க மிருகங்களின் படம் உள்ள புத்தகம் ஒன்று சென்னையிலிருந்து வாங்கி அரசருக்கு அனுப்பினார் என்று தெரியவருகிறது." மராட்டிய மன்னர்களின் மேற்பார்வையில் பல கோயில்கள் இருந்தன. அவற்றுள் சிற்ப ஒவிய வேலைப்பாடுகள் பல இருந்த போதிலும் கிடைத்துள்ள ஆவணங்க ளில் அவை பற்றிய சான்றுகள் இல்லை. 19. 5-10 1, 105, 106 20. 4-15 (அடிக்குறிப்பு 9 காண்க) 21. 1-126; ச. ம. மோ. த. 26-18 22. 11-16, 88 in 23. 4-484 24. 4-217 25. ச. ம. மோ. த.4-9 26 ச. ம. மோ, க. 11-42 27. 4-414 28, 1-222 29. 2-267