பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 1. சையம்பா 2. உமாம்பா 3. ஜயதம்பா 4. ஜிஜாயி 5. தீபாம்பா 6. ராமகுமாராம்பா 7. சகுணாம்பா 8. அபரூபாம்பா 9. யசவந்தம்பா 10. அனசாம்பா 11. கெளராம்பா 12. அருணாம்பா 13. ஸ்ாகுமாரம்பா 14. கிரிஜாம்பா 15. சீமாம்பா (16) சோயிராம்பா (17) துகாம்பா ஆகியோர் அரசர் இறப்பதற்கு முன்னமேயே இறந்துவிட்டனர் என்றும் அவ்வாவணத்திற் கூறியிருக்கிறது. 1863ஆம் ஆண்டு ஜனவரி வரையிலும் ஆவுசாயேப் பாயி சாயேபு களுக்குச் சேரவேண்டிய தொகைபற்றி எழுதப்பட்ட குறிப்பில்" மேலே கண்ட 15 பேர்களில் (12) அருணாம்பா தவிர்த்து மற்றவர் பெயர்கள் காணப்படுகின்றன. இந்த இடைக்காலத்தில் அருணாம்பா இறந்தனர். ஆதல் கூடும். 28-7-1858இல் ரெஸிடெண்டு செரி அவர்கள் சிரஸ்தேதாருட்ன் அரண்மனைக்கு வந்தார்." ஆவுசாயேப் பாயி சாகேபுகளுடன் பேசுகிற காலத்தில் மாமியாருடன் வசிக்கும் ஏழு பாயி சாகேபுகள் மாமியார் உடன் இல்லாமல் பார்க்கமுடியாது என்று மறுத்தனர். பின்னர்த் தனியாக இருக்கும் எட்டு பாயி சாகேபுகளுடன் பேசுவதற்குச் சென்றார். அக்காவின் மூலம் அவர்களுடைய பெயர்களைக் கேட்டார். அவ்வெண்மர் பெயர்" பின்வருமாறு: 1. சுந்தராயி 2. தராயி 3. பராயி 4. பங்காயி 5. சம்பராயி 6. ஜமராயி 7. கெளராயி 8. லஸ்ராயி இவர்களில் மூத்தவர். சுந்தராயி 20 வயது ; இளையவர் கமரா 12 வயது என்று அவர்களைக் கேட்டபொழுது விடை தந்தனர். பின்ன மாமியாருடன் இருக்கும் ஏழு பாயிசாயேபுகளைக் காணச்சென்றபொழு, ரெஸிடெண்டு அவர்களையும் 'உங்களில் மூத்தவர் யார்? இளையவர் யார்? என்று வினவினார். ' எங்களில் மூத்தவர் 20 வயதுள்ள சமராயிசாட் இளையவர் 12 வயதுள்ள சுந்தராயிசாப் " என்று பதில் வந்தது.' எண்மர் பதிலில் கமராயி 12 வயதினள் என்று இருக்க எழுவர் பதிலி சுந்தராயி 12 வயதினள் என்று மாற்றிக் கூறியுள்ளது கவனிக்கற்பால, எண்மர் பதிலில் கமராயி, எழுவர் பதிலில் சமராயியாகத் திகழ்கிறார் என் கொள்ளவேண்டியுள்ளது. மேலும் எண்மர் பெயருடன் முதற்கண் கூறப்பட் பதினைவர் பெயரையும் ஒப்பிடின் கெளராயி தவிர்த்து மற்ற ஏழும் ம1 பட்டிருத்தலைக் காணலாம். இவ் எண்மர் பெயர்கள் வீட்டில் அழை, 2. 6–434, 435 3. இவர் 1860இல் இறந்தார் என்று தெரிகிறது 4. 4-117’ 5. 4-148 6, 4–150 7. 4–160