பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/452

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

443 இந்நூல் " ஐந்து தமிழிசை நாட்டிய நாடகங்கள் ' என்ற தஞ்சை சரஸ்வதி மகால் வெளியீட்டில் ஐந்தாவதாக அச்சிடப்பட்டுள்ளது. " சூத்திரதாரன் வசனம்' என்ற பகுதியில் " இந்தப்படிக்குச் சகசிராசப் பிரணிதமான காவேரி கல்யாணம் என்கிற நாடகத்திலே" என்ற பகுதியால் ஸ்ாஹஜி இதன் ஆசிரியர் என்று கொள்ளக்கிடக்கிறது. இந்த நூலில் பின்வருபவற்றுள் ஸாஹஜி பற்றிய குறிப்புக்கள் உள்ளன: புகழ் பஞ்சநதி வாசா போசல குல ஈசா சகசிராசா இதுவும்பகலும் தான்பணியும் சர்வேசா (பக்கம் 234 ); தரு கமலைமா தருளாலே புவியை - ஆளும் சகசி இராச தேவேந்திரன் மேலே கருணைசெய்வது போலே கல்யாணம் செய்யும் இனிமேலே (236) , போசல குல சகசேந்திரன் பணி - பஞ்சநதேசுவரா சகசி மகா ராசனால் சோழ மண்டலத்தில் தினமும் இந்தப் புவி விளையச் செய்து ஸ்திரமாக எப்போதும் வாழ்ந்திரு நீ (241 - 242 ) ; தண்டமிழார் சகசேந்திரன் தானாக வளரும் சோழ மண்டலத்தை வளர்க்கும் தேவிக்கு மங்களம் (242). ஸாஹஜியைப்பற்றிய மேற்கண்ட குறிப்புக்களை நோக்கின் பிறர் ஒருவர் எழுதி ஸாஹஜி பெயரால் வெளியிட்டனரோ என்று கொள்ளத் தோன்றுகிறது. இவர் பன்மொழிப்புலவராகத் திகழ்ந்தமையின் இவர் இந்நூலை இயற்றினார் என்று கோடலும் பொருந்தும். இது கி. பி. 1704இல் எழுதப்பெற்றது." இந்நூல் பக்கம் 225இல், " திருசிற்றம் பலமோடு தேவாரம் சொரிந்தேன்." என்றவிடத்துத் ' தேவாரம் " குறிக்கப்பெறுகிறது." பக்கம் 23இல் தருவு 1இல் திருமால் வழிபாடு செய்கையில் ஒரு பூக்குறையத் தன் விழியை யிடந்து சாத்தியமையும், தருவு 2 இல் மார்க்கண் டேயன் பொருட்டு இயமனைச் சிவபெருமான் காலால் உதைத்தமையும், 3இல் பரவையாரைக் கூடிய சுந்தரர் பாடலுக்கு இறைவன் மகிழ்வதையும், 5இல் 2. பக்கம் 206, ஐந்து தமிழிசை காட்டிய நாடகங்கள் 3. தஞ்சை மராட்டிய அரசர் மோடி ஆவணக்கருத்தரங்கு - தஞ்சை மராட்டிய மன்னர் காலத்திய தமிழ் இலக்கிய வளம் - புலவர் சொக்கலிங்கம் - 4. இக்காளிலும் தேவாரம் ' என்றால் என்ன ? என்று கேட்பவர் பலருளா