பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/58

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48 ஆகையால் துளஜா ஒர் உடன்படிக்கை செய்துகொண்டார். இதன்படிக்கு இரண்டு ஆண்டுக்குரிய பேஷ்குஷ் எட்டு லக்ஷம் ருபா கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனைப் பின்வரும் மோடி ஆவணத் தமிழ் ஆக்கக் குறிப்பு' உறுதி செய்யும் : "1772 : நவாப் முகம்மது அலிகானுக்கு வருஷத்திற்கு பேஸ்ஜி கொடுப்பது ரூ. 4 லக்ஷம், தோபாவிற்காக ரூ. 30,000, ஆக ரூ. 4,30,000 மிஸ்தர் ஜாஜியிடம் இருந்து ரூ. 100க்கு 2 வீதம் கடன் வாங்கிக் கொடுப்பது ; மன்னார்குடி சுபாவில் உள்ள தேசத்தை அடகு வைப்பது. ' 書 ஒப்பந்தப்படிக்குத் தொகை கொடுத்துவந்தபோதிலும் முகம்மது அலிகான் தஞ்சையைக் கைப்பற்ற வேண்டும் என்ற எண்ணம் கொண்டிருந் தமையின் கும்பினியினரைச் சரிகட்டிக்கொண்டு தஞ்சைமேல் படையெடுத்தார். கடுமையான போர்க்குப் பிறகு ஒருநாள் எதிர்பாராதவண்ணமாக ஜெனரல் ஸ்மித் கோட்டையைப் பிடித்தார். துளஜாவும், அவருடைய குடும்பமும், சேனாபதி மானாஜியும், பல அதிகாரிகளும் சிறைபடுத்தப்பட்டனர். பல் லக்ஷம் மதிப்புள்ள பொன் அணிகலன்களும் கைப்பற்றப்பட்டன. நவாபு தஞ்சைக் கோட்டைக்கு உரியவரானார்." 17-9-1773 முதல் மூன்றாண்டுக் காலம் தஞ்சைக் கோட்டையும் அரசும் நவாபின் ஆட்சியில் இருந்தன. கி. பி. 1774 ஓராண்டு மட்டுமே நவாபின் அலுவலர்கள் 81 ல கூடிம் ரூபாய் வசூலித்தனர். இங்ங் ைம் கும்பினி அதிகாரிகள் நவாபுக்கு உதவியது இங்கிலாந்து அரசின் ஒப்புதல் இல்லாமலே நடந்த செயலாகும். இங்கிலாந்து அரசுக்கு இச்செய்தி தெரியவந்ததும் அவர்கள் நன்கு ஆராய்ந்து துளஜாவை மீண்டும் அரசராக ஆக்குமாறு ஆணை பிறப்பித்தனர். 11-4-1776இல் லார்ட் பிகட் (Lord Pigot) தஞ்சைக்குப்போந்து கோட்டையைக் கைப்பற்றித் துளஜாவை மீண்டும் அரசர் ஆக்கினார். இதனைப் பின்வரும் குறிப்பு மிகத் தெளிவாகக் கூறும் : "1777 - துளஜா ராஜா சாயபு இரண்டாவது தடவை பட்டத்துக்கு דיי s வந்த பின்பு........ P. 61, A History of British Diplomacy in Tanjore K. Rajayyan (1969) 3-142 4 அ. தோபா - கப்பம் : Tribute The Rajah mortgaged villages to the Danes to find money to pay the tribute for the year 1772 (P. 65, A History of British Diplomacy in Tanjore - K. Rajayyan, 1969) 6. –Do- P. 65 7, 6-193