பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/68

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58 கூறி, அவர் போலவே இருந்த குப்பி என்ற வேலைக்காரியின் மகனைக் கொணர்ந்து, சுஜான் பாயியை வீழ்த்தி அவனை அரசராக்கினார். இந்த ஸ்வாயி ஷாஹஜியைக் காட்டுராஜா என்றும் கூறுவர். உண்மை வெளிப் பட்டது. காட்டுராஜாவும் வெளியேற்றப்பட்டார். பிரதாபசிங்கர் அரசராக முடிசூட்டப்பெற்றார்." அரசிழந்த ஸவாயி ஷாஹஜி (காட்டு ராஜா) பிரெஞ்சுக்காரரின் உதவியை நாடினார் பயனில்லை ; ஆங்கிலேயரை அணுகினார். டேவிட் கோட்டை (Fort St. David - che syri) îsi Gabiž, ஆங்கிலேயர், தேவிக்கோட்டையை அளிப்பதாகவும், போர்ச் செலவுகளைத் தருவதாகவும் காட்டுராஜா ஆசைகாட் டியதும், உதவி தர இசைந்தனர். தேவிக்கோட்டை கொள்ளிடம் கடலோடு கலக்குமிடத்தில் உள்ள ஒரு துறைமுகம். அது ஒரு மைல் சுற்றளவுள்ள மதிலையுடையதாயிருந்தது மற்றும் 18 அடி உயரமுடையது. ஆங்கிலப்படை இருமுறை தேவிக்கோட்டையை நோக்கிப் படையெடுத் தது முதல் தடவை தேவிக்கோட்டையைப் பிடிக்க முடியாது திரும்பியது ; இரண்டாவது தடவை முயன்று பிடித்தது. பிரதாபசிங்கர் சமாதானம் செய்து கொண்டார். அதன்படி தேவிக்கோட்டையை ஆங்கிலேயருக்கு அளித்தமை யோடு போர்ச் செலவுகளும், காட்டுராஜாவுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 4,000 ஓய்வூதியமும் தருவதாக ஒப்புக் கொண்டார்." தேவிக்கோட்டை விவகாரம், இந்திய உள்நாட்டு விவகாரங்களில் ஆங்கிலேயர்களின் முதல் தலையீடு ஆகக் கருதப்பெறும்." தொடங்கிய வேளை ஒரு சிறந்த வேளை. ஆகவே ஒரு நூற்றாண்டுக்குள் ஆங்கிலேயர் தஞ்சை அரசையே துடைத்துப்போக்கும் நிலை உருவாயிற்று. ஆனால் பின்குறித்த மோடி தமிழாக்கம்,' 1751: பிரதாபசிங்கு காலத்தில் திவ்யகோட்டை அகப்பம் 5 வருஷத்துக்கு 5500 வராகன் வரவுக்கு மேஸ்தர் ஜியார்ஜ் பிகட் ( Pigot ) கவர்னர் சென்னப் பட்டணம் பந்தர்வகேராவுக்கு வழக்கப்படிக்கு முத்திரை இரசிது எழுதிக் கொடுக்கிறது ” பக்கம் 88-86 போன் ஸ்லே வம்ச சரித்திரம், தமிழாக்கம். u&aeli, 262-264. Maratha Rule in the Carnatic ; @$ τ βπάθεὸ ετι ' Grrgm வுக்கு ரூ. 40,000 பென்ஷன் ' கொடுத்ததாக உள்ளது. ஆனால் ஓர்ம் ( Orme) ergpastu History of Indostan LG# 1 Läsử 118@ei g. 4000 என்றுள் ளது. (நான்காவக பதிப்பு, 1803) This was the first interference of the English in Indian Politics and began under very favourable auspices - P. 51, The Maratha Rajahs of Tanjore - K. R. Subramaniam (1928) 7. ச. ம. மோ. த. 9-4 7.அ. தேவிக்கோட்டை

6.