பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/79

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

69 நார்டன் ஆகிய இருவரும் இரண்டாம் சிவாஜியின் மூத்த இராணியிடம் வந்தனர். இராணியார் தம் வழக்குக்கு உறுதி தருவதற்காக, உப்பும் துளசியும் கொடுத்து உறுதி வாங்கினர்." 26-7-1858இல் செரி அவர்கள் தற்காலிக ரெஸிடெண்டு என்று குறிப்பிடப் பெறுகிறார். அ - _12-4-1855லும், 14-5-1856லும்" ரெஸிடெண்டு ஃபார்பஸ் என்று குறிக்கப்பட்டவர், 17-10-1856இல் ' தஞ்சாவூர் ரெஸிடெண்டு கமிஷனர் ' என்று குறிக்கப்பெற்றார்." அந்த நாளில் இவர் சர்க்கேலுக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். 29-10-1856இல் ஒரு கடிதம் எழுதியதாகவும், அதிற்கண்ட வண்ணம் கணக்குகளைத் தயாரித்துக் கொடுக்கவில்லையென்றும், மூன்று வாரமாகியும் ஒரு " ஜாபிதா'வும் வரவில்லை என்றும், அரசாங்கத்தின் எல்லாவித சொத்துக்களையும் சுவாதீனம் செய்து கொள்ள வேண்டிய பொறுப் புத் தனக்குள்ளதென்றும், மறுநாட்காலை வந்து, கஜானா, சங்கிராமம், ஜமதார்கானா, நூல்நிலையம், தாருகானா, மற்றுமுள்ள ரிக்கார்டுகள் ஒப்புக் கொள்ள வேண்டும் என்றும், ஒவ்வொருவரும் தடையின்றி ஒப்புவிக்கவேண்டும் என்றும், அரசருடைய மனைவிமார்களுக்கு வீண் அச்சம் வேண்டியதில்லை என்றும் எழுதினார். சர்க்காரில் ' தஸ்தாவேஜிகளின் ஜாபிதா' தயார் செய்ததாகத் தெரியவில்லை. ஆகையால் 18-10-1856இல் ஒரு குமாஸ்தாவை அனுப்புவதாகவும் அவர் வீட்டுக்குத் திரும்பும்பொழுது ரிகார்டு அலுவலகத் துக் கதவுகளுக்குத் தன் முத்திரை'யைப் போட அவருக்கு இடம் கொடுக்க வேண்டும் என்றும் கமிஷனர் ஃபார்பஸ் எழுதி இருக்கிறார்." கமிஷனர் ஃபார்பஸ் 22-11-1857இல் ஸரஸ்வதி மகாலிலுள்ள ஆங்கிலப் புத்தகங்களைப் பார்த்துச் சென்றார்." 13. ஃபிலிப்ஸ் ( Philips ) . இவர் 1858, 1859 ஆண்டுகளில் ரெஸிடெண்டு-கமிஷனர் வேலை பார்த்தவராகத் தெரியவருகிறது. 1852-ரிஸிடெண்டு எச். டி. ஃபிலிப்ஸ் ஸ்கொயர் ஆபீசுக்கு ரூ. 5000 வெளியே கொண்டுபோக உத்தரவாகவேண்டும். நாளை பகல் 7 நாழி கைக்கு ரெஸிடெண்டு ஃபிலிப்ஸ் அவர்களை மாதுபூரீ ஆவுசாகேப் பாயி சாயேப் அவர்கள் பேட்டிக்கும், எல்லா மகால்களின் சீல் பார்ப்பதற்கும் வருவதால் எல்லா மகால் அதிகாரிகளும் தயாராக இருக்கவும் " என்ற ஆணையால்" 1858 இல் இவர் அலுவல் ஏற்றதும் எல்லா மகால் களுக்கும் சென்று பார்வையிட்டார் என்றும் அரசமாதேவிகளோடு பேசிவந்தா என்றும் தெரிகிறது. - - _ 61. 2-226, 227 61.அ. 4-117, 118 62. ச. ம. மோ. க. 6-8 63. 3-127 64. 7-666 65. 7.658 முதல் 670 முடிய : 8-88 முதல் 97 முடிய 66. 8-97 முதல் 101 வரை 67. 2–228, 229, 68. ச. ம.மோ, த. 18-5