பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/83

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8 அரசு அலுவல்களும் அலுவலர்களும் தஞ்சை மராட்டியர் ஆட்சியில் அரசரே ஆட்சித் தலைவர் ஆவர். அவர் களுக்கு உதவி செய்யப் பல அலுவலர்கள் இருந்தனர். சர்க்கேல்; சுபேதார் : பதக்தார் : அமல்தார் : சிரஸ்தேதார் தாசில்தார் ; ஹவில்தார் கொத்தவால் : கார்பாரி ; கில்லேதார் ; கார்கூன் ! திம்மதி ; காவல்காரர் ; ஹர்காரா : வக்கில் : மாஹல் மத்யஸ்தர் : கமாவிஸிதார் ; கலாசி : கோட்டிவாலா , நிஸ்டிபதி : இமாரதி ; பதக்நீஸ் : காஸ்நீஸ் : தஸ்துர் ; ராயஸ் ஹேஜிப் : சிட்நீஸ் : பாக்குவான் என்று இன்னோரன் ன பல உத்தியோகப் பெயர்கள் மோடி ஆவண ங்களில் காணப்பெறுகின்றன. சர்க்கேல் என்பதையே தலைமையான அலுவலாகக் கருதலாம். சர்க்கேல் என்ற சொற்கு " மந்திரி ' என்று பொருள். எனவே தஞ்சை அரசில் சர்க்கேல் ' என்பது தலைமை அமைச்சரைக் குறிக்கலாம். இவ்வுயரலுவல் பிரதாபசிங்கர் காலத்தில் தோற்றுவிக்கப்பெற்றது என்றும், இ வ ைர அரண்மனைக்குரிய செயல்களைக் கண்கா னிப்பவர் என்றும் கருதுவர்." கி. பி. 1689 முதல் 1707 வரை நடந்த மராத்தியர் போரில் கன்னோஜி ஆங்க்ரே | Kanhoji Angre) என்பவர் கப்பற்படையில் சிறந்து விளங்கினார். அதனால் இவர் சத்ரபதி ராஜாராம் அவர்களால் கடற்படைத் தளபதியாக (Admiral of the Maratha Navy) நியமிக்கப் பெற்று சர்க்கேல் ' என்ற சிறப்புப் பெயர் சூட்டப் பெற்ருர். இச்செய்தியால் கடற்படைத் தளபதியும் சர்க்கேல் எனப்பட்டார் என அறியவருகிறது.* 1. 1-59 2. Chamberlain of the Royal Household-Sirkale was another name for domestic minister-P.78, The Maratha Rajahs of Tanjore-K. R. Subramanian. 23, P. 70, Shivaji & Facets of Maratha Culture-Marg Pub-Bombay (1980) 10