பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/89

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

79 -மானாஜி அப்பா ! இவர் பிரதாப்சிங்கரின் தானைத் தலைவர்; அஞ்சாமையுடையவர் ; தேவிக்கோட்டையை ஆங்கிலேயர் கைப்பற்ற வந்த பொழுது நிகழ்ந்த போரில் மிகச்சிறந்த முறையில் போரிட்டார்; 26-4-1752இல் பிரஞ்சுக்காரரிடமிருந்து கோவிலடியைக் ட்கைப்பற்றினார். பிரதாபசிங்கரின் அமைச்சர் சக்கோஜிக்கு இவர் பேரில் பொறாமையுண்டு. ஆகவே 1758இல் இவருக்குப் பதில் கோவிந்தராவ் தானைத்தலைவர் ஆனார். லாரென்ஸ் என்ற ஆங்கில தளபதியின் இடையீட்டால் மானாஜி மீண்டும் தானைத்தலைவ சாகிப்பகைஞர்களை வென்றார். எனினும் சக்கோஜியின் கெடுமதியால் மீண்டும் மானாஜி இப்பதவியினின்று நீக்கப்பட்டார். 1754இல் நடந்த போரில் கோவிந்தராவ் தோற்றமையின் மானாஜி மீண்டும் தானைத்தலைவரானார். கி. பி. 1740இல் jp உதவியோடு அறந்தாங்கிக் கோட்டையை இராமநாதபுரத்தவரிடம் இருந்து கைப்பற்றியவர் இவரே." இங்ங்னம் இவர் வெற்றிச் சிறப்புடையவராகத் திகழ்ந்தமையால் ஒரு சிற்றுாருக்கும் தோட்டத் துக்கும். இவர் பெயர் இடப்பட்டன எனத் தெரிகிறது. தத்தாஜி அப்பா சரபோஜி அமர்சிங்கு பிடியினின்று விடுபட்டுச் சென்னையிலிருந்தபொழுது சரபோஜியிடம் உயர் அலுவலராகத் தத்தாஜி அப்பா காணப்பெறுகிறார். * ------ - ராபூரு தத்தாஜி அப்பா சாயேப் அவர்களுக்கு ஸ்ேவகன் பாபண்ணா அநேக ஆசிர்வாதம். இங்கு ஸ்மஸ்த்தானத்தின் விஷயம் ராறி சிவராயர் மாஜி சர்கேல் பாபாவுக்குத் தன்னுடைய கார்பாரி என்று உத்தரவிட்டு 200 வராகன் சம்பளம் போட்டு அவருடைய பிள்ளைக்கு - ரிகார்டு ஆபீசில் நியமித்தாயிற்று......” என்று பாபண்ணா என்பவர் (தஞ்சையிலிருந்து) கடிதம்' எழுதியிருப்பதால் தத்தாஜி அப்பா சென்னையில் இருந்தார் என்றும், அவ்வப்பொழுது தஞ்சை நிலவரத்தை அவருக்கு எழுதி வந்தனர் என்றும் தெரிகிறது. கோபால் வெங்கர்ஜி என்பவரும் மேற்கண்ட தத்தாஜி அப்பாவுக்கு எழுதிய கடிதம் தத்தாஜி அப்பா அவர்களுக்கு ராகோஜி மஹாடிக் என்பவரும் ஒரு கடிதம் எழுதியுள்ளார்." 29-10-1795க்குரியது இராமச்சந்திர சிவாஜி என்பவர் தத்தாஜிக்கு எழுதிய கடிதம் ஆகும்.' - 42. Loasas, 258, 264, 266, 278, 281. 285; Maratha Rule in the Carnatic - Srinivasan, C. K. -, --, -- 43, 6–831 44. 3–108; 5-447 45. 5-461 46. 7–616, 3-33, 34 47. 3-19, 20.