பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் கால அரசியலும் சமுதாய வாழ்க்கையும்.pdf/97

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

87 இறப்பு சர்க்காருக்கு இழப்பு என்றும், அவர் நீதிமான் புத்திமான் ; விசுவாச் முள்ள சர்க்கேல் நன்றாக உழைத்தார்-என்றும் அக்கடிதத்தில்" இவருக்குப் புகழாரம் சூட்டப்பெற்றுள்ளது. இவர் காலத்தில் சேனாதுரந்தரர் கங்காதர் ரக்மாஜி, சேனாதுரந்தரர் வராஹப்பையா ராமசாமி அய்யா, சேனாமுகவர்ய நீலகண்டராவ் ஆனந்தராவ் ஜாதவ்' முதலியவர்கள் இருந்தமை பல ஆவணங்களால்" அறியப்பெறும். சேனாமுகவர்ய நீலகண்ட ராவ் ஆனந்த ராவ் ஜாதவ் . இவர் சேனைத்தலைவர்களுள் ஒருவர். கி. பி. 1838இல் இவர்க்கு மூன்றாவது கல்யாணத்தைப்பற்றி ஒரு ஆவணம் கூறுகிறது." சத்திரதருமம் எவ்வாறு நடத்தப்பெறவேண்டும் என்பதுபற்றி விரிவான நடைமுறைக்குறிப்புக்கள் இவர் தந்திருக்கின்றமை ஓராவணத்தால் அறியப்பெறும்." "அவசியமானசெலவு செய்யவேண்டும்; மராமத்து முதலியவற்றுக்காகவும் வருமானம் குறைந்தால் ஈடுகட்டுவதற்காகவும் கால்பாகம் தொகையை மீதி வைத்துக்கொள்ள வேண்டும் ; கால்பங்கு மீதி வைத்துக்கொள்ள முடியவில்லை யென்றால் சிறிதாவது சேமிக்கவேண்டும் கதி இல்லாதவர், பரதேசி, பொருள் சட்ட உடல் வலிமையற்றவர், வழிப்போக்கர், குருடர், முடவர், குழந்தை, கிழவர் இத்தகையோர்க்குச் சத்திரத்தில் உணவு அளிக்க வேண்டும் ; வழிப்போக்கர் எவராயினும் நோய்வாய்ப்படின் சத்திரம் வைத்தியரைக்கொண்டு சிகிச்சை செய்து பத்தியமாக உணவு அளிக்கவேண்டும்; உத்யோகஸ்தர் யாராவது வரின் அவரவர் பெருமைக்குத் தக்கவண்ணம் உணவு மரியாதை செய்ய வேண்டும்; சத்திர அலுவலர் யாரும் உணவுண்ணக்கூடாது; ஊரிலுள்ள சோம்பேறிகளுக்கு உணவு அளிக்கக்கூடாது............ ' * * என்பவை அவர் தந்த நடைமுறைக் குறிப்புக்களின் சுருக்கம் ஆம். இவற்றால் சத்திர தருமம் நன்கு நடைபெறக் கண்ணுங் கருத்துமாய் இவர் இருந்தார் என்பது போதரும். - சர்க்கேல் அண்ணாஜி தியாகராஜ பண்டிதர்' சர்க்கேல் காளேராவ் அப்பா" சர்க்கேல் கோவிந்தராயர்," சர்க்கேல் வீராசாமிப்பிள்ளை' என்பவர் களைப் பற்றிய குறிப்புக்களும் கிடைத்துள்ளன. வீராசாமிப்பிள்ளை தவிர்த்து மற்றையோர் அரசமரபினர் அல்லது உறவின்முறையாராவர். வீராசாமிப்பிள்ளை முதலில் மானேசர் ' பதவியில் இருந்தார் : பின்னர் ஆக்டிங் சர்க்கேல் ' ஆனார் ' 17-7-1871இல் சர்க்கேல் பதவி யில் இருந்தவராகக் காணப்பெறுகிறார்.' 103. 2.123 104. 1-314 105. 1-208, 216, 275 106. ச. ம. மோ. த. 28-16 107, 8-231 முதல் 240 முடிய. 108. 4-117 ; 7–780 109. 4-125 110. 6-391. 111. 8–30 112, 6-351 113, 6–236 114, 8–80