பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/231

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு

217



19. சிவாஜி இறந்தது சகம் 160 (கி.பி. 1679); வயது 52 (பக். 229)

20. சம்பாஜிக்குச் சகம் 1614 (கி. பி. 1692) இல் மகன் பிறந்தார்: சாஹாவு என்று பெயர் (பக்.229).

21. சம்பாஜியைப் பிடித்து வருமாறு காரதலப்கானை அனுப்பியது (பக். 230). o

22. சாஹ-வை அவுரங்கசீபு தன் மகளிடம் கொண்டு போய்க் கொடுத் தார் என்று போ. வ. ச. கூற (பக்கம் 71), திருமுடியில் அவுரங்கசீபிடத்தில் அக்குழந்தையை பேகம்' அழைத்துச் சென்றாள் என்றுளது (பக். 240).

23. ரகோஜீயை விருபாய்க்குச் சுவீகாரம் என்று போ. வ. ச. கூற (பக். 73. iருபாய்க்குக் குழந்தை பிறந்தது என்று திருமுடி கூறும் (பக். 248).

24. சாஹ- தனக்கு மகனின்மையால் பிரதாப சிம்மருடைய மக்களில் துளஜா அல்லது அமர்சிங்கைச் சுவீகாரம் கேட்டதாகவும், மறுக்கப்பட்டதாக வும் திருமுடி கூறும் (பக்கம் 250-251).

25. வடக்குவீதி ராஜ கோபால சுவாமி கோயிலருகில் ஏகோஜிக்கும் நாயக்க அரசருக்கும் போர் நடந்தது (பக். 268-9).

26. கும்பகோணத்துக்கருகில் தன்பெயரால் ஷாஹாக்கோட்டை என் றொரு கோட்டை எடுப்பித்தார்.

27. சரபோஜி ராஜா காலத்தில் தrண துவாரகபுரம் எனப்பட்ட ராஜ மன்னார் குடியில் ஒரு பெரிய நகரை உண்டாக்கி அதற்கு மகாதேவபட்டணம் என்று பேர் வைத்து அங்குத் துக்கோஜி யிருந்தமை குடும்பத்தில் மனவேறுபாடு தோன்றியமையால் துக்கோஜி மகாதேவ பட்டணத்துக்குச் சென்றார் என்று போ. வ. ச. கூறும் (பக்கம். 82-83).

28. துக்கோஜி அரசரானதும் மகாதேவ பட்டணத்தைக் கள்ளர்கள் கைக் கொண்டதால் துக்கோஜி தன் மாப்பிள்ளையாகிய சுல்தான்ஜி ஜகதாப் என்பவ ரைக் கில்லேதாராக அனுப்பியமை (திருமுடி. பக். 290).

29. அவுரங்கசீபு இறந்தபிறகு அவருடைய மகன் காலத்தில் நிஜாம் அல் விகான் அவுரங்கபாத் சமஸ்தானத்தின் முதன்மை அதிகாரம் பெற்றார்; அதனை வாச யோக்கியமல்ல' என்று கருதி விஜயபுரத்துக்கருகில் ஒரு நகர முண்டாக்கி, அயிதராபாதென்று பேர் வைத்து, அங்குத் தன்மக்கள் யானதி கான், நாசர்ஜங்கு, நிஜாமல்லிகான் என்பவருடனும், ஒரு மகள், அவள் மகனா கிய இராசத் மோதின்கான் என்பவர்களுடனும் இருந்தார். பின் முதல் மகன் யாண்திக்கானை டில்லிக்குத் தன் வக்கீலாக அனுப்பினார். தன் நண்பர்கள் சாதுல்லாகானை ஆர்க்காடு சுபாவுக்கும், அப்தல் என்பவரைக் கடப்பை சுபா

69-28