பக்கம்:தஞ்சை மராட்டிய மன்னர் வரலாறு.pdf/239

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மன்னர் வரலாறு 225

இது 79 பகுதிகளையுடையது. 79ஆவது முற்றுப் பெறவில்லை. இதனை அடுத்து ஒருதாளாவது இருந்திருத்தல் கூடும். இடையில் இரண்டு பக்கங்கள் (16 ஆவது பகுதியின் பிற்பகுதி முதல் 22 ஆவதின் முற்பகுதி வரை) இதில் இல்லை. இதில் தற்போது 26 பக்கங்கள் உள.

இதை எழுதியவர் வரலாற்றுணர்ச்சி ஒரு சிறிதும் இல்லாதவர் என்பது தெளிவு. தானறிந்தவற்றை எழுதவேண்டும் என்று கருதிப் பாபாஜி முதல் அமர்சிங்கு வரை எழுதியுள்ளார்.

திருமுடி சேதுராமன் சுவடியில் மறைத்த செய்திகள் இரண்டு இதில் உண்டு. (1) சுஜான்பாயி ஆட்சி செய்தமை; (2) சுஜான் பாயியை வீழ்த்தி அரச குடும்பத்தில் பிறக்காத ஒருவனை அரசனாக்கியமை.

இதில்கண்ட சிறப்பான செய்தி துளஜாவே அமர்சிங்கை அரசனாக ஆக்கியது என்பதாகும்.

இது ஆய்வாளருக்குச் சிறிதும் பயனில்லாத கையெழுத்துச் சுவடியாகும்.

திருமுடி சேதுராமன் சுவடியிலுள்ள சில செய்திகளைப் பற்றி நம்கருத்தைக் கூறுவதும் இங்குப் பொருத்தமாகலாம்.

சகரயாண்டொடு கிறித்துவ ஆண்டும். தமிழ்நாட்டு நடைமுறைக்கேற்ப பிரபவாதி ஆண்டும், சித்திரை முதலிய மாதங்களும் ஒவ்வொரு தடவையும் கொடுத்திருப்பது காலத்தைச் சரிபார்ப்பதற்குப் பயன்படும் என்னலாம்.

முதல் ஏகோஜி இரண்டாம் ஏகோஜி என்று எண்ணொடு பொருத்தி அரசர் பெயரைக் கூறுவது போ. வ. ச. வில் இருக்கத் திருமுடியில் இல்லை. அரசரை எண்ணொடு பொருத்திக்கூறுவது வரலாற்றுக்குப் பெரிதும் பயன்தரும் ஆனால் திருமுடியில் கூறாமைக்குரிய காரணம் அரசுரிமை இழந்த மனக்கசப் பாகலாம்.

முகமதிய சித்த புருஷரின் திருவருளால் ஷாஜி பிறந்தார் என்று போ. வ. ச. கூறியிருப்பினும், போ. வ. சவுக்கு முன்னைய நூலாகிய சிவபாரதம் குறிக்கவில்லை. ஆகையால் திருமுடியிலும் சொல்லவில்லை போலும்.

ஏகோஜி IV முதற்கொண்டு பல அரசர்கட்கும் சேர்த்துக் கொள்ளப்பட்ட மனைவியர் இருந்தமை, அன்னோர்கட்குப் பிள்ளைகள் பிறந்தமை, போ. வ. ச. வில் கூறியிருக்கத் திருமுடியில் கூறப்படாமைக்குரிய காரணம் என்ன? இங்ங்னம் பெண்கள் பலரை மனைவியராகச் சேர்த்துக் கொள்ளுதல் அந்நாளில் பரவ லாக வழக்கில் இருக்க, இம்முறையைச் சுவடியை எழுதிய 'வஜாராத்மா சிவாஜி கப்பராவு காடேராவு' முற்றும்,வெறுத்தவர் ஆதல் வேண்டும்; அல்லது அரசர்கட்கு இழுக்கு எனக்கருதினார் போலும்! ஒரத்தநாடு சத்திரம் பற்றிய செய்தியைக் கூறுங்காலும் சரபோஜியின் வைப்பு மனைவி (முக்தாம்பாள்) என்பவரைப்