பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/101

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88 இ. அ. ச. ஞானசம்பந்தன் அறியப்பட்டிருந்த வரை சடங்குகட்குப் பொருளிருந்தது . சடங்குகள் பாரமாயின : நாளாவட்டத்தில் சடங்குகளின் அடிப்படையிலிருந்த கொள்கைகள், நமபிக்கைகள், ஆகிய இரண்டுமே மறைந்து விட்டன. நம்பிக்கையின் அடிப்படையில் பொருளறிந்து சடங்குகள் நடைபெற்றது போக அவை இரண்டும் மறக்கப்பட்ட நிலையிலும் சடங்குகள் பார மாக நின்று விட்டன. மேலும் காரணகாரிய மற்ற சடங்' குகள் மனிதனின் அறிவைச் செம்மையான வழியில் செலுத்தத் தவறின. இடைக்கால விஞ்ஞானம் : இதனிடையில் புதிய சில குழப்பங்களும் தோன்ற லாயின. மிகப்பழைய காலத்தில் அறிவு வளர்ச்சி பெறாத காலத்தில் மனிதன் ஒரளவு நம்பிக்கையின் துணை மட்டுமே கொண்டு வாழ்ந்தான். அதனால் அந்நிலையில் அவனுக்கு ஒன்றும் பிரச்சினை தோன்ற வில்லை. நாளா வட்டத்தில் அறிவின் துணைக்கொண்டு விஞ்ஞான வளர்ச்சியில் ஈடுபட்டான். விஞ்ஞானம் பூரணமாக வளராத நிலையில் மனிதனுக்குச் சில குழப்பங்களை உண்டாக்கியது உண்மை தான். அதுவும் மேனாடுகளைப் பொறுத்த வரை அவனுடைய நம்பிக்கை ஆட்டங்கொள் ளுமாறு விஞ்ஞானம் செய்து விட்டது உண்மையே. பூமி யும், ஏனைய உலகங்களும் இறைவனால் படைக்கப் பட்டவை என்றும் இது போன்ற பல கருத்துக்களும் நம்பிக்கையின் அடிப்படையில் தோன்றி வளர்ந்து வலுப் பட்டு நின்றன. பூமியின் தோற்றம் முதலிய பற்றி விஞ்ஞானம் புதிய கருத்துக்களைத் தந்ததுடன் சோதனை மூலம் பல புதிய கண்டுபிடிப்புகளைத் தரவும் நம்பிக்கை ஆட்டங் கண்ட தில் வியப்பில்லை.