பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90 0 அ. ச. ஞானசம்பந்தன் 'இந்துஸ்தானத்தில் விவிலிய நூல் பரப்பப்பட்டால் அங்குவாழும் சுதேசிகள் அடையபோகும் வியப்புக்கு ஒர் எல்லையே இராது! அந்நூலின்படி நாம் கொள்ளை யடிக்கக் கூடாது. கொலை, களவு முதலியவற்றில் ஈடு படக் கூடாது என்று உபதேசிப்போம். அவ்வாறு உபதேசம் செய்கின்ற நாம் 50 ஆண்டுகளுக்குள் இந்திய உபகண்டம் முழுவதும் நம் ஆட்சியைப் பரப்பி விட்டோம்; மனித இயல்பினால் எத்துணை பஞ்சமா பாதகங்களை நினைத்துப் பார்க்க முடியுமோ அவை அனைத்தையும் நம் பொது வாழ்வில் செய்தே காட் டி விட்டோம்! இத்தகைய வாழ்க்கையை மேற்கொள்ள வேண்டுமானால் ஈடு இணையற்ற நெஞ்சுத் துணிச்சல் இருத்தல் வேண்டும் நமக்கு.' இன்றைய நிலை : அணுயுகம் என்று பெருமை பேசிக்கொள்ளும் இன்றை நாளிலும் சமயத்தைப் பொறுத்தவரை பெருமாற்றம் ஒன்றும் நிகழ்ந்து விடவில்லை. உள்ளத்தில் ஒன்று, உதட் டில் ஒன்று, செயலில் ஒன்று என்ற முறையில் தான் போலிச் சமய வாழ்க்கை மேற்கொள்ளப் பெற்று வருகிறது. இதன் பயனாக செல்வங் கொழிக்கும் மேனாடு கள் அல்லல் உறுகின்றன. மனிதன் ரொட்டித் துண்டால் மட்டும் வாழ்வதில்லை என்ற பழைய உபதேசத்தை மறந்து விட்டு ரொட்டி வேட்டையில் இறங்கிய அந்த நாடுகள் செல்வத்தை எல்லையில்லாமற் குவித்த பிறகும் மனத்தில் அமைதி ஏற்படவில்லை என்பதைக் கண்டன. தேவைக்கு அதிகமான செல்வம் குவிந்து கிடப்பதன் காரணமாக மனத்துயரும் சுமையும் செல்வம் இல்லாத க்ாலத்தே இருந்ததைவிட இன்னும் அதிகமாக இருப் ப்தை உணர்ந்தனர். இச் செல்வத்தைத் தேட முயன்றவர். கள் பலர் ஒரளவு இத்தொல்லையிலிருந்து தப்பிக் கொண்டனர். காரணம் அவர்கள் வாழ்க்கையில் பெரும்