பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/117

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

104 ைஅ. ச. ஞானசம்பந்தன் ஒன்றுபடுத்தி (synthesis)சமரச சுத்த சன்மார்க்கம் என்ற பெயரில் ஒன்றாக்க முயன்றார் வள்ளலார். எல்லாச் சமயங்களும் ஒளியை ஏற்றுக் கொள்ளுகின்றன. இறைவன் ஒருவன் உண்டு என்பதையும் அவன் கருணையே வடிவா னவன் என்பதையும் ஏற்றுக் கொள்கின்றன. எனவே வள்ளலார் இங்குள்ள சமயங்கள் அனைத்தும் ஏற்றுக் கொள்ளும் பொதுத் தன்மைகளை மட்டும் எடுத்து அருட் பெருஞ்சோதி தனிப்பெருங் கருணை’ என்ற ஒரு தாரக மந்திரத்தைத் தந்தார். - இவ்வாறு கண்டால் அவ்வப்பொழுது பெரியார்கள் தோன்றிச் சமயம் என்ற பெயரில் உள்ள குப்பைகளை நீக்கி விட்டு சமயங்கள் நிறுவனமாக ஆக்கப்பட்டமையின் ஏற்பட்டுள்ள தொல்லைகளை நீக்கி உண்மைச் சமயத் தைப் பரப்ப முயன்றனர். ஆனால் அவர்கள் காலத்தில் அவர்களுடைய ஆற்றலாலும் நெஞ்சு உரத்தினாலும் இவை வளர்ந்தன எனினும் அவர்கட்குப் பின் மெள்ள மெள்ள அவற்றிலும் குப்பை சேரலாயிற்று. அதன் பயனாகச் சமயம் பெரிதும் பயன்படும் இயல்பை இழக்கத் தொடங்கி விட்டது. சமயவாதிகள் செய்ய வேண்டுவன : இந்நிலைமாற வேண்டுமானால் சமயவாதிகள் என்று கூறிக் கொள்பவர்கள், அவர்கள் எந்தச் சமயத்தைச் சேர்ந்தவராயினும் துணிந்து முன்வந்து பக்திவழியைப் பரப்ப முன்வரல் வேண்டும். தத்துவ ஆராய்ச்சியையும், மனவியல் ஆராய்ச்சியையும் வளர்த்துச் சென்றுள்ளோம். அதனால் நம் அறிவு விரிவடைந்தது; விளக்கம் பெற்றது. ஆனால் அதன் பயனாக மானிட வாழ்வு செம்மைப் பட்டதா என்றால் இல்லை என்றே கூறல் வேண்டும். பிரித்துக் காணும் அறிவை வளர்ப்பதை விட அனைத் தையும் ஒன்றுபடுத்திக் காணும் உணர்வை வளர்ப்பது