பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/134

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 181 யாகும்? பொறி புலன்களைத் தந்த இறைவன் அவற்றின் துணைகொண்டு எவற்றை அனுபவிக்க வேண்டும் என்று முடிவு செய்தற்குரிய பகுத்தறிவை மட்டும் நம்மிடமே தந்து விட்டான், எனவே இவற்றைத் தவறான வழியிற் செலுத்தி விட்டுப் பொறிகளையோ அவற்றைப் படைத்த வனையோ குறை கூறுதல் பெருந் தவறாகும். உலகில் எதனையும் காண்பதற்குப் புற நோக்கமோ புறக் கருவிகளோ இன்றியமையாதவை என்ற கருத் தில்லை. இக்கருத்தைத் திருமூலர் மட்டுங் கூறினாரென் றில்லை; நவீன விஞ்ஞானமும் இதனை அறிவுறுத்து கிறது. ஒப்பியல் தத்துவத்தை உலகுக்கு எடுத்துக் காட்டிய மாபெரும் அறிமினாகிய ஐன்ஸ்டீன் என்ற மேதை தொலை நோக்காடியால் (Telescope) அற்றை நாளில் காண முடியாத ப்ளுட்டோ (Piபto) என்ற கோளின் இருப்பையும் இடத்தையும் காகிதம் எழுது கோல் என்பவற்றின் உதவி கொண்டே நிலை நிறுத் தினார். மனிதன் சிந்தனையை அகமுகமாகச் செலுத்து வதன் மூலம் உண்மைப் பொருளைக் காணமுடியும் என்பதற்கு இது ஒர் எடுத்துக்காட்டாகும். அகமுக நோக்கம் ஆண்டவனை மட்டுமே அறிய உதவும் என்ற தவறான எண்ணம் கொள்ள வேண்டா, அறிவை அகமுக மாகச் செலுத்துவதன் மூலமேகூடப் புற உலக அறிவை வளர்த்துக் கொள்ளலாம் என்பதையும், அவ்வறிவை இன்னும் ஆழமாகச் செலுத்துவதன் மூலம் மெய்ப் பொருளைக் காணவும் கூடும் என்பதையும் அறிதல் வேண்டும். சத்தியப் பொருளை, நித்தியப் பொருளை அறிவதற்கு அகமுக நோக்கம் பயன்படுகிறது. அவ்வாறு உண்மைப் பொருளை அறிகின்ற முறையில் பல்வேறு உண்மைகளை யும் அவ்வகமுக நோக்கம் கண்டு வெளியிடுகிறது. மனிதப் பண்பாட்டை அடிப்படையாகக் கொண்டு ஆன்மிக