பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/141

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

128 அ. ச. ஞானசம்பந்தன் என்ன பயன் கிட்டும், சிவப்பு மலரால் அருச்சித்தால் என்ன பயன் கிட்டும் என்றும் சரித்திரம் வகுக்கத் தொடங்கி விட்டது. சிவபூசையை ஒரு வியாபாரமாக்கிய பெருமை பிற்கால சாத்திரங்கட் கு (அவற்றின் பெயரைக் கூற விரும்பவில்லை) உரியதாகும். 'நல்லவும் தீயவும் அல்ல குவிமுகிழ் எருக்கம் ஆயினும் கடவுள் பேணேம் என்னா' என்று பழைய புறநானூறு கூறவும் யாவர்க்குமாம் இறைவற்கொரு பச்சிலை' என்று மூலர் கூறவும் ஐய நின்மாட்டு யாஅம் இரப்பவை, பொன்னும் பொருளும் போகமும் அல்ல, அன்பும் அருளும் அறன் மூன்றும்மே என்று பரி யா ட ல் கூறவும் மிக உயர்ந்த நிலையில் இருந்த சைவ சமயம், இன்ன பூவுக்கு இன்ன பயன் என்று கூறும் இழி நிலைக்கு வந்தமையாலேயே இன்று அது கேட்பாரற்றுக் கிடக்கிறது. பரந்த மனப்பான்மை : மிகப் பழமையான நம்முடைய சமயம் எத்துனைப் பரந்த மனப்பான்மையுடன் யாவரையும் தன்னுள் அனைத்துக் கொண்டு வளர்ந்தது என்பதை நினைக் கையில் உண்மையான பரவசமும் பெருமிதமும் அடைய லாம். உயர்ந்தார், தாழ்ந்தார், கற்றார், கல்லாதார், உடையார், இல்லார் என்ற வேறுபாடற்று அர்த்தமற்ற சடங்குகட்கு இடந் தாராமல் எல்லா உயிர்களிடத்தும் இறைவன் உறைகின்றானாகலின் உயிர்கட்குத் தொண்டு செய்வதே சமயத் தொண்டு என்ற மிக உயர்ந்த குறிக் கோளுடன் இருந்த சமயம் எங்கே? புறச் சமயத்திலிருந்து மீண்ட திருநாவுக்கரசர் பிராயச்சித்தம் செய்துகொண்டா சைவரானார்? எத்தகைய மனநிலை உடையாருக்கும்