பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/145

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132 0 அ. ச. குானசம்பந்தன் பிறசமயத்தவர் இறைவன் இருக்குமிடத்திற்கு உயிர்கள் தேடிச் செல்லவேண்டும் என்று கூறுவர். ஆனால் நம் அரும்பெரும் சைவ சமயத்தில் வேறுவித மாய் பேசப்படுகிறது. குற்றமும் சிற்றறிவும் உடைய உயிர்கள் அவனை நாடிச் செல்லல் இயலாது. ஆதலின் கருணைக்கடலாகிய அவன் அவர்கள் (உயிர்கள்) இருக்கும் இடம் நாடி வருகிறான் என்று பேசுகிறார் தலைமகனாகி நின்ற தமிழ் ஞானசம்பந்தர். அதுவும் அக்கருத்தை திருநெல்வேலியில் பேசுகிறார். 'என்றும் ஒர் இயல்பினர் என நினைவு அரியவர் ஏறு அது ஏறிச் சென்றுதாம் செடிச்சியர் மனைதொறும் பலிகொளும் இயல்பு அதுவே துன்று தண் பொழில் நுழைந்து எழுவிய கேதகைப்போது அளைஞ்து தென்றல் வந்து உலவிய திருநெல்வேலி உறை செல்வர் தாமே." -3-92-2 பரபக்கம் பேசவேண்டா: உலகிலுள்ள பல்வேறு மக்களும் தத்தமக்கென்று ஒவ்வொரு சமயத்தை வகுத்துக் கொண்டு அதனைப் பின் பற்றி வருகின்றனர். ஆனால் அத்தகைய சமயங்கட்கும் சைவ சமயத்திற்கும் ஒரு பெரிய வேறுபாடு உண்டு. அப் பிற சமயங்கள் உய்ர்ந்தவையா தாழ்ந்தவையா என்ற தேவையற்ற வாதத்தில் புகுவது இற்றை நாளில் சரி யன்று. பரபட்ச மூலம் பிறவற்றின் குறைபாடுகளைப் பற்றிக் கூறும் காலம் மலையேறிவிட்டது. இன்று ஒவ் வொரு சமயத்தின் தார தம்மியத்தை எடுத்துப் பேசுவதை விட்டுவிட்டு இப் பல்வேறு சமயங்களிடையே காணப் பெறும் ஒருமைப்பாட்டைக் காணப்புகுவது நன்று. இவ்வாறு ஒருமைப்பாட்டைக் காணப் புகுவதன்