பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/151

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138 அ. அ. ச. ஞானசம்பந்தன் ஏனைய சமயங்கள் மக்களுக்குத் தொண்டு செய்தால் அது இறைவனுக்கு உகப்பாகும் என்று கூறுகையில் சைவ சமயம் மக்கள் தொண்டே மகேசன் தொண்டு என்று கூறுகிறது. படமாடக் கோயில் பரமற்கொன்று ஈயின் நடமாடக் கோயில் நம்பர்க்கங்கு ஆகா நடமாடக் கோயில் நம்பர்க்குஒன்று ஈயின் படமாடக் கோயில் பகவதற்குஅது ஆமே” --திருமந்திரம்-1857. மக்களுக்கு நேரிடையாகச் செய்யப்படும் தொண்டு இறைவனுக்குக் செய்யப்பட்டதாகும் என்று கூறுவதோடு அமையாமல் மகேசனுக்கு நேரிடையாகச் செய்யப் பெறும் தொண்டு மக்களுக்குப் பயன்படாது என்றுங் கூறக் கூடிய வீறு படைத்தது சைவம். பெரிய புராணத்தில் வரும் அடியார்கள் பலரும் மக்கள் தொண்டு செய்தே மகேசன் பதம் அடைந்தனர். திருஞானசம்பந்தர் போன்ற தலைமகனாகி நின்றவர் களும் மக்கள் பசியால் வாடியதைக் காணச் சகியாமல் (திருவிழிமிழலையில்) மடம் வைத்தும் பஞ்சம் தீர்க்கின்ற வரை உணவு இட்டனர். யாரோ ஒரு பெண் கணவனைப் பறிகொடுத்து வருந்தி அழுதாள் என்றால் அது அவள் விதி என்று கூறிவிட்டுச் செல்லாமல் அவள் துயர் துடைக்க முன்வந்து கணவன் உயிரை எழுப்பித்தரப் பாடுபடும் கருணை உடையவர்கள். நஞ்சூட்டியும் நீற்றறையில் இட்டும் அமையாமல் இறுதியாகக் கல்லொடு பூட்டிக் கடலில் எறிந்தவர் களிடமும் ஒரு சிறிதும் மனத்தில் காழ்ப்புக் கொளளாமல் “sup3;$6vT 9Iudammt fr” (Unconventional jains) argir pl மட்டுமே கூறும் மாபெரும் வீரர்களைப் பெற்றது சைவம்.