தத்துவமும் பக்தியும் 0 141 நாளையும் கோளையும் கண்டு நடுங்குகின்ற இற்றைய நாள் சமுதாயத்தாரைக் கண்டு எள்ளி நகை யாடுபவர்போல 'தான் அமர் கோளும் நாளும் அடியாரை வந்து நலியாத வண்ணம் உரைசெய் ஆன சொல் மாலை ஒதும் அடியார்கள் வானில் அரசாள்வர் ஆணை நமதே' 11 م 85 - 2 سسه என்று பிள்ளையார் பாடியது சைவம். நம் தேவைகள் எவையாயினும் உள்ளங் கலந்து இறைவனிடம் கேட்டால் அனைத்துங் கிடைக்கும் என்ற கருத்தை இம்மையே தரும் சோறும் கூறையும் ஏத்தலாம் இடர் கெடலுமாம் அம்மையே சிவலோகம் ஆள்வதற்கு யாதும் ஐயுறவில்லையே' (7-84-1} என்று சுந்தரர் பாடியது சைவம். வயது முதிர்ந்த காலத்தில் இறப்பைக் கண்டு அஞ்சுவது கூட அறியாமை என்பதற்குத் தம் முதிர்ந்த வயதில் அனுபவத்தால் கண்டு நாவரசர். 'கற்றுக் கொள்வன வாய் உள நாஉள இட்டுக் கொள்வன பூஉள நீர்உள கற்றைச் செஞ்சடையான் உளன் நாம்உளோம் எற்றுக்கோ நமனால் முனிவு உண்டதே?’’ . — 5-9 I-6 என்று பாடியது சைவம். போலிப் பூசை செய்பவர்கள் அன்றும் இருந்தமையின் அவர்களை நோக்கி அனுபவப் பழமாகிய நாவரசர் 'பொக்கம் மிக்கவர் பூவும் நீருங் கண்டு, நக்கு நிற்பன் அவர் தமை நாணியே (5-90-9) என்று சாட்டையடி கொடுத்தது சைவம். х . . . . . z
பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/154
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை