பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/156

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் 0 14ச் தம் எதிரே நிற்பவர் வயதால் முதிர்ந்தவராக் இருப்பினும் தம் தந்தையாரின் குருவாகவே இருப்பினும் ஆணவம் நிறைந்த மனத்துடன் "ஆணவ மலத்தின் இலக்கணம் என்னை? என்று கேட்டால் கேட்பவரைச் சுட்டித் தம் ஆள்காட்டி விரலால் கட்டும் இளைய பெருந் தகையாகிய மெய்கண்டதேவர் வாழ்ந்தது சைவம். இவ்வாறு காட்டியவர் ஐந்து வயது நிரம்பாத பாலகர் என்று அறிந்திருந்தும் அந்த ஆள்காட்டி விரல் தம் அஞ்ஞானத்தைச் சுட்டெரித்ததை உணர்ந்துகொண்டு. உடனே இளைய பெருந்தகையின் திருவடிகளில் வீழ்ந்து சீடனாகும் மனப்பக்குவம் உடைய அருள்நந்தி சிவத்தைப் பெற்றிருப்பது சைவம். வாணாள் முழுவதும் விதிமுறை பிறழாமல் காளத்தி நாதனைப் பூசித்தும் அவனைக் கனவிலன்றி நனவிற்கான (լք ւգ-աո 5 சிவகோசரியாரையும், அவர் எதிரேயே வாழ்ந்தும் தன்பரிசும் வினை இரண்டும் சாரும் மலம் மூன்றும் அற, அன்பு பிழம்பாய்த் திரிந்தமையின் (கண்154) ஆறு நாட்களில் இறைவனே வெளிப்பட்டுத் தம் கையைப் பற்றிக் கொள்ளுமளவில் வளர்ந்து விட்ட கண்ணப்பரைப் பெற்றிருப்பது சைவம். உலகமுழுதும் தேடினாலும் இத்தகைய பரந்துபட்ட கொள்கைகளையும், சகிப்புத்தன்மையையும் கொண்ட சமயத்தைக் காண்பது அரிது. அத்தகைய சைவசமயத்தின் உரிமையாளராகிய நாம் நம்முடைய பரம்பரைச் சொத்து எத்தகையது என்பதை அறிந்து கொள்ளாமலும், அறிய முயலாமலும் குண்டு சட்டிக்குள் குதிரை ஒட்டிக்கொண்டு இருக்கிறோம். சைவத்தையும் அதன் உயிர் நாடியையும் அறிய முற்பட்டவர்களின் ஆன்மா ஐம்புல வேடரின் வளர்ந்து அயர்ந்தது (சிவஞா. போ. சூ. 8) என்று நம் பெரியோர் கூறிப்போயினர். ஆனால் இன்று சைவர்கள் என்று தம்மைக் கூறிக்கொள்பவர்கள் ஐம்புல வேடரில்