பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/17

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

A 8 அ. ச. ஞானசம்பந்தன் பாக அமைந்துள்ள அறிவு, உணர்வு என்ற இவை இரண்டினிடையே போராட்டம் நிகழுமாயின் இறுதியில் அறிவு உணர்விடம் சரணடைந்து விடுதலைக் காண் கிறோம். இக்கொள்கைக்கு ஒப்பற்ற இலக்கியமாக விளங்குபவர் விவேகானந்தராவார். உலகம் தோன்றிய நாள் தொட்டே இவ்வுண்மை இருந்துதான் வருகிறது. இது இவ்வாறு இருக்கிறது என்பதற்காக நம் முன்னோர் அறிவின் சிறப்பையும் இன்றியமையாமையை யும் குறைத்து மதிப்பிட்டு விடவில்லை. உணர்வின் பேருமையை உணர்ந்து அதன் காரணமாகப் பக்திமான் களாக மாறிய நம் முன்னோர் பிரசாதத்தை மட்டும் உண்டு விட்டு இருந்து விடவில்லை. எனவே பக்திமான் கண்டது பிரசாதம்' என நம் அன்பர் சிலர் பேசுவது அறியாமையில் விளைந்த வாதமாகும். மிகச் சிறந்த பக்திமானாகிய மணிவாசகர் போன் றோர் உணர்வு உலகத்தில் முக்குளித்து எழுந்தவர்களா யினும் நான் யார்? என் உள்ளம் யார்? ஞானங்கள் யார்? என்னை யார் அறிவார்? கோத்து-21 என்ற வினாக்களை அறிவின் துணைகொண்டு எழுப்பி அதே அறிவின் துணை கொண்டு அவ்வினாக்கட்கு விடைகாணவும் முற்பட்டனர் யான் யார் என்ற வினாவும், அதற்கு விடை காண வேண்டும் என்ற முயற்சியும் உணர்வுலகத்தில் தோன்ற முடியாதவையாகும்; அவை அறிவுலகத்தில்தான் தோன்றும். பாண்டிப் பேரரசின் தலைமை அமைச்சராக இருந்த மணிவாசகப் பெருமான் அறிவுப் பேராற்றல் பெற்றிருந்தமையாலேயே தலைமை அமைச்சராக அரச னால் தேர்ந்தெடுக்கப் பெற்றார். எனவே உவர்கள் அறிவின் துணைகொண்டு ஆயும் இயல்புடையவர் அல்லரோ என்ற ஐயுற வேண்டிய தேவை இல்லை. இப் பெருமக்கள் அறிவின் துணைகொண்டு தத்துவ ஆராய்ச்சி யில் ஈடுபட்டாலும் இறுதியில் பக்தர்களாக மாறி விட்டவர்களாவர்.