பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/171

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 இ. அ. ச. ஞாசனசம்பந்தன் என்பதை அறிவது நலந்தரும். முதலாம் இராசராசன் அவன் மகன் முதலாம் இராசேந்திரன் ஆகிய இருவரும் வடநாட்டிலிருந்து காளாமுக சைவர்களை இவண் கொண்டுவந்து குடியேற்றினர் என்றும் அறிய முடிகிறது.” இராசேந்திரன் தன் குல குருவாகிய உடையார் சர்வசிவ பண்டிதருக்கு ஆசார்ய போகமாக பெரிய நிலப்பரப்பை வழங்கியுள்ளான். இவர் தஞ்சைக் கோயிலில் பூசை செய்து வந்தவர். இவரும் இவருடைய சீடர்களும், அவர்களுடைய சீடர்களும் தஞ்சை, ஆர்யதேசம், மத்யதேசம், கெளட தேசம் ஆகிய பாண்டிருப்பினும் இந் நிலப்பயனை அனுபவித்துக் கொள்ளலாம். வாரணாசியில் உள்ள கொல்லாமடத்தைச் சேர்ந்த சிவ இராவளர் என்பாரும், பிகா மடத்தைச் சேர்ந்த வேறு ஒர் இராவளரும் குறிக்கப் படுகின்றனர் காளாமுகர் செல்வாக்கு : இடைக்காலச் சோழர் காலத்திய சைவம் சிவயோகிகளின் சைவத்திலிருந்து வெறுப்புத்தரக் கூடிய பாசுபதம், காளாமுகம், ஆகிய பல பிரிவுகளுடன் படர்ந்து இருந்தது." மகாவிரதிகள் என்று கூறப்பெறும் காளா முகர்கள் அதிகப் பிரபலமடைந்திருந்தனர். ஒன்பதாம் நூற்றாண்டு முதல் பன்னிரண்டு முடிய இவர்கள் தமிழ் நாட்டில் அதிகச் செல்வாக்குப் பெற்றிருந்தனர். இரண் டாம் பராந்தகன் காலத்திருந்த கொடும்பாளுர் தலைவன் விக்ரமகேசரி மூவர் கோயிலைக் கட்டி அதனுடன் ஒரு பெரிய மடத்தையும் கட்டி வடநாட்டு மதுரையிலிருந்து வந்த ஆத்ரேய கோத்ரத்தைச் சேர்ந்த மல்லிகார்ஜுனர் என்ற காளாமுகக் குருவுக்கு அளித்தான். I. K. A. N. Colas P. 644 (ed. 1955) 2. K. A. N. Coias P. 642 (ed. 1955) 3. K. A. N. Colas P. 648 (ed. 1955)