பக்கம்:தத்துவமும் பக்தியும்.pdf/172

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தத்துவமும் பக்தியும் அ 158 வட ஆர்க்காட்டில் உள்ள மேல்பாடியில் இருந்த காளாமுக மடத்தின் தலைவராக இருந்தனர் லகுலீஸ்வர பண்டிதர் எனப்படுவார். திருவொற்றியூரில் சதுரானன பண்டிதர் என்பாரும் இருந்தார். இவற்றை எல்லாம் எடுத்துக் காட்டிய திருநீலகண்ட சாஸ்திரி தம் சோழர் என்ற நூலில், இந்த எடுத்துக் காட்டுகள் சோழர் காலத்தில் தென்னாட்டில் காளாமுகர் பெற்றிருந்த செல்வாக்குச் சான்றாகும் என்று கூறு கிறார்.1 தமிழர் மடங்கள் சில : காளாமுகர் மடங்களும், குகைகளும் முதலாம் இராச ராசன் காலத்திற்கு முற்பட்டே இருந்து பல்கின என்பது நீலகண்ட சாஸ்திரியாரின் கொள்கை. சோழர் காலத்தில் இவற்றின் செல்வாக்குப் பரவியது எனலாம். இம்மடங் களில் சில தமிழ் மக்களின் ஆதரவுடன் அவர்களாலேயே பரிபாலிக்கப்பட்டும் இருந்து வந்தன. திருச்சத்திமுற்றத்து 'முதலியார் மடம் திருவிடைமருதினைச்சேர்ந்த மாளிகை மடத்து முதலியார் சந்தானம்' என்பவை தமிழ்நாட்டி னுள் அடங்கி இருந்தவை. இதன் எதிராகக் காளாமுகர் மடங்கள் பல ஆர்யதேசம், காசி, காஷ்மீர் முதலியவற் றுடன் தொடர்பு கொண்டிருந்தன. இவற்றுள் முக்கிய மானவை கோளகி மடம் போன்றவை. வடநாட்டி லிருந்து பட்டர்கள் ஏராளமாக வருவிக்கப் பெற்று அமர்த்தப்பெற்றதிருவரங்கம் போன்றமடங்கள்.பாசுபதம் காளாமுகர் காபாலிகம் பிரிவைச் சேர்ந்தவையாகும்." சைவ அந்தணர்வைணவர் ஆகியோரும் மடங்கள் வைத்திருக்கலாம் எனினும் நாம் அவை பற்றி அறியச் சான்றுகள் அதிகம் இல்லை. 1. K. A. N. Colas P, 643 (ied, 1955) 2. K.A. N. Colas P. 650. - 3. Ibid.